This Article is From Apr 27, 2019

டெல்லி பள்ளி வளாகத்திற்குள் வைக்கப்பட்டிருந்த டீசல் டேங்க் – அரசின் அதிரடி சோதனை

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பள்ளியின் பாதுகாப்பு குறித்து சந்தேகங்கள் இருந்தால் உடனடியாக புகார் செய்யுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

டெல்லி பள்ளி வளாகத்திற்குள் வைக்கப்பட்டிருந்த டீசல் டேங்க் – அரசின் அதிரடி சோதனை

2,500 லிட்டர் கொள்ளவு கொண்ட டீசல் டேங்க் நிலத்தடியில் வைக்கப்பட்டிருந்தது.

New Delhi:

டெல்லி அரசு கிரேட்டர் கைலாஸ் -2வது பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நிலத்தடியில் வைக்கப்பட்டிருந்த எரிபொருள் டேங்கை கண்டுபிடித்துள்ளது. அந்த பள்ளியின் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்று துணை முதலமைச்சர் மனிஷ் சிஷோடியா கூறியுள்ளார்.

மாணவர்கள் இதுநாள் வரையிலும் ‘வெடிக்கத் தயாராகவுள்ள பாமின்' மீது உட்கார்ந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

2,500 லிட்டர் கொள்ளவு கொண்ட டீசல் டேங்க் நிலத்தடியில் அமைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

பள்ளியின் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது குறித்து எதும் தெரியாது என்று பள்ளிநிர்வாகம் கூறியுள்ளது.

”இந்த பள்ளி முழுவதும் குளிரூட்டப்பட்ட பள்ளிக்கூடம் என்பதால் ஏசியின் ஜெனரேட்டருக்குத் தேவையான எரிபொருளாக டீசலே உள்ளது என்றும் அதனால் தான் டீசல் எரிபொருள் சேகரிக்கப்பட்டிருந்ததாகவும். சட்டத்திற்கு உட்பட்டே சட்டம் வழிகாட்டிய, அதில் கொடுக்கப்பட்ட அளவை மட்டுமே டீசல் டேங்கில் சேகரித்து வைத்திருந்ததாகவும் டீசல் பள்ளி கட்டிடங்களை விட்டு தள்ளியே நிலத்திற்குள் அமைக்கப்பட்டது” என்று பள்ளி நிர்வாகம் மின்னஞ்சலில் பதில் அளித்துள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பில் துணை முதலமைச்சர் கே.ஆர் மங்கலம் பள்ளி சட்டவிரோதமாக டீசல் மற்றும் பெட்ரோலை சேகரித்து வைத்திருப்பதாக 20 பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் மாணவர்களின் பாதுகாப்பு நலன் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டதன் அடிப்படையிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பள்ளியின் பாதுகாப்பு குறித்து சந்தேகங்கள் இருந்தால் உடனடியாக புகார் செய்யுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மிகப்பெரிய சம்பவம் நடக்கும் முன்னரே இது கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அரசு இது குறித்த விசாரணையில் ஈடுபடும் என்று தெரிவித்தார்.

.