This Article is From Feb 25, 2020

டிரம்பின் வருகையையொட்டி குஜராத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அகமதாபாத்தில் மோட்டேரா மைதானத்தில் உரை நிகழ்த்தவுள்ளார். இந்த மைதானத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் அமரலாம்.

டிரம்பின் வருகையையொட்டி குஜராத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு!!

பிப்ரவரி 24 மற்றும் பிப்ரவரி 25 ஆகிய 2 நாட்களில் டிரம்ப் இந்தியாவில் இருப்பார்.

Ahmedabad (Gujarat):

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வருகையை முன்னிட்டு குஜராத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலனியா மகள் இவாங்கா உள்ளிட்டோருடன் இந்தியாவில் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய 2 தினங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். 

அவரது வருகையை முன்னிட்டு குஜராத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.  சுமார் 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மாநில போலீசார் எஸ்.பி.ஜி. எனப்படும் அதிரடிப்படையினருடன் தொடர்பில் உள்ளனர். அவர்களுடன் ஏ.டி.எஸ். எனப்படும் தீவிரவாத தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடி படையினர் உள்ளிட்டோரும் குஜராத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். 

அகமதாபாத்தின் மோட்டேரா மைதானத்தில் டிரம்பின் நிகழ்ச்சி சுமார் 3 மணி நேரத்திற்கு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மைதானத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் அமரும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

விழா நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் அதிகளவு பொறுத்தப்பட்டுள்ளது. சபர்மதி ஆசிரமத்தை ஒட்டியுள்ள ஆற்றில் படகுகள் முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

மைதானத்திற்கு உள்ளே 10 ஆம்புலன்சுகள் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் முதற்கட்ட உதவிக்கான அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. 

உள்ளூர் போலீசார், முனிசிபல் கார்ப்பரேஷன், தீயணைப்பு துறையினர், அவசர சேவைப் பிரிவினர் ஆகியோர் தங்களுக்குள் ஒத்துழைப்புடன் செயல்படுகின்றனர். 

அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகையால் குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

.