বাংলায় পড়ুন Read in English
This Article is From Sep 26, 2019

இந்த யானைக்கு 24 மணி நேரமும் ராணுவ பாதுகாப்பு!! ஏன் தெரியுமா?

நாட்டின் அறிவிக்கப்படாத சொத்தாக யானை நடுங்கமுவா ராஜா கருதப்படுகிறது. இந்த யானை தினமும் 35 கிலோ மீட்டர் வரை வாக்கிங் செல்லுமாம்.

Advertisement
உலகம் Edited by

யானைக்கு எப்போதும் ராணுவ வீரர் குழு பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறது.

Colombo:

இலங்கையின் மிக வயதான யானை நடுங்கமுவா ராஜாவுக்கு 24 மணிநேரமும் ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொழும்பு நகர வீதிகளில் யானை ராஜா ராணுவ வீரர்களுடன் வலம் வருவதைக் காணலாம்.

யானை நடுங்கமுவா ராஜாவுக்கு 65 வயது ஆகிறது. உயரம் 10.5 அடி. மீட்டர் கணக்குப்படி பார்த்தால் 3.2 மீட்டர் உயரம் கொண்டதாக யானை ராஜா உள்ளது. 

இலங்கையின் பெரும்பான்மை மக்கள் புத்த மதத்தை பின்பற்றி வரும் நிலையில், ஆண்டுதோறும் நடைபெறும் புத்த திருவிழாவில் புத்த சிலையை தூக்கி வரும் யானையாக நடுங்கமுவா ராஜா உள்ளது. இதனால், இந்த யானையை நாட்டின் அறிவிக்கப்படாத பொக்கிஷமாக அரசும் மக்களும் கருதி வருகின்றனர். 

கடந்த 2015-ம்  ஆண்டின்போது யானை மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியது. இதனால் யானை காயம் அடைந்திருந்தது. சிசிடிவி காட்சிகளை சோதித்தபோதுதான் இந்த சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இலங்கை அரசே யானை நடுங்கமுவா ராஜாவுக்கு ராணுவ பாதுகாப்பை அளித்துள்ளது. 

Advertisement

எப்போதும் அதனுடன் 2 உதவியாளர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உடன் செல்வார்கள். நாள்தோறும் சுமார் 35 கிலோ மீட்டர் வரையில் யானை வாக்கிங் செல்கிறது. குறிப்பாக இரவு மற்றும் குளிர்ந்த நேரங்களில்தான் யானை அதிக தூரம் நடக்குமாம். 

ராஜா யானையை கொண்டாடும் இதே இலங்கையில்தான் எலும்பும் தோலுமாக காட்சியளித்த யானை டிக்கிரி கடந்த செவ்வாயன்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement