This Article is From Apr 17, 2019

பிளே ஸ்டோரில் இருந்து டிக்-டாக் செயலியை நீக்கிய கூகுள்!

குழந்தைகளை மேற்கோள் காட்டி ஆபாசத்தை வெளிப்படுத்தும் வீடியோ பகிர்வு செயலியான டிக்-டாக்கை தடைசெய்ய வேண்டும் என மத்திய அரசை நீதிமன்றம் வலியுறுத்தியது.

பிளே ஸ்டோரில் இருந்து டிக்-டாக் செயலியை நீக்கிய கூகுள்!

இந்தியாவில் இனி டிக்-டாக் செயலியை தரவிறக்க தடை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

டிக் டாக் செயலியை பதவிறக்கம் செய்யும் வசதியை பிளே ஸ்டோரிலிருந்து கூகுகள் நீக்கியது.

இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவிவரும் டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும். இந்த செயலியை இளைஞர்கள் மற்றுமின்றி சிறுவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகிறார்கள்.

இப்படி அளவுக்கு அதிகமாக அனைவராலும் பயன்படுத்தப்படும் இந்த செயலியை பல இளைஞர்கள் தவறான வகையில் பயன்படுத்துகிறார்கள். அதன் விளைவாக சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்தோனேசியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இளைஞர்களின் நலன் கருதி டிக் டாக் செயலியைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்று அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் குழந்தைகள், இளைஞர்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற விவகாரங்களில் அரசே முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க முயல வேண்டும்" என கருத்து தெரிவித்த நீதிபதிகள் டிக் டாக் செயலியை தரவிறக்கம் செய்ய தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், மதுரைக்கிளை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டிக் டாக் நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், இனிமேல் தவறான நோக்கத்துடன் வீடியோக்கள் பதிவு செய்யப்படமாட்டாது. நீதிமன்ற உத்தரவுக்கு பின்பு, பல லட்சம் வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளன. நீதிமன்றம் தடை விதித்து இருப்பதால், தற்போது டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. எனவே அந்த தடையை விலக்கி உத்தரவிட வேண்டும்” என்று கோரியது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து ஆப்பிள், கூகுள் ஆகிய நிறுவனங்கள் டிக் டாக் செயலியை நீக்கும்படி எச்சரித்திருந்தது. இதையடுத்து கூகுள் நிறுவனம் இந்தியாவில் டிக் டாக் செயலியை தரவிறக்கம் செய்ய முடியாதபடி ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கியிருக்கிறது.
 

.