Read in English
This Article is From Apr 08, 2019

டிக்டாக் செயலியை தடை செய்யும் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது -உச்ச நீதிமன்றம்

TikTok Ban: “நாங்கள் தகவல் தொழில் நுட்ப விதிகள், 2011ஐ முழுமையாகக் கடைப்பிடித்து வருகிறோம்… சட்ட அமலாக்கம் மூலம் சிறந்த ஒருங்கிணைப்பைப் பெற இந்தியா சார்பாக தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக” டிக்டாக் ஆப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

Advertisement
இந்தியா , (with inputs from IANS)

TikTok App Ban: டிக்டோக் செயலி 54 மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளது.

New Delhi:

Ban On TikTok: சென்னை உயர் நீதிமன்றம் பிரபலமான சீன வீடியோ ஆப்பான டிக்டாக் “ஆபாசத்தை ஊக்குவிப்பதாக” கூறி அதை தடை செய்ய அரசாங்கத்திற்கு  உத்தரவிட்ட நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் மன் சிங்வி கொடுத்த மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. 

கடந்த புதன்கிழமை, சென்னை உயர்நீதிமன்றம் டிக் டாக் இன் பதிவிறக்கத்தை மத்தியில் தடை செய்யக் கேட்டிருந்தது. இந்த ஆணை டிக்டாக் ஆப்பை பயன்படுத்தி வீடியோ வெளியிடவதையும் ஒளிபரப்புவதையும் தடை செய்யும் விதத்தில் இருந்தது. 

டிக்டாக் ஆப் இந்தியாவில் 54 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை டிக்டாக் ஆப்பிற்கு எதிரான மனுவை விசாரித்தது. 

Advertisement

இந்த மனுவை மதுரையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் முத்துகுமார் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டது. டிக்டாக் செயலி ஆபாசம், கலாசார சீரழிவு, குழந்தைகளை தவறாக பயன்படுத்துதல், தற்கொலை ஆகியவற்றை ஊக்குவிப்பதாக கூறி அதைத் தடை செய்ய வலியுறுத்தினர். 

“நாங்கள் தகவல் தொழில் நுட்ப விதிகள், 2011ஐ முழுமையாகக் கடைப்பிடித்து வருகிறோம்… சட்ட அமலாக்கம் மூலம் சிறந்த ஒருங்கிணைப்பைப் பெற இந்தியா சார்பாக தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக” டிக்டாக் ஆப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

Advertisement

உயர் நீதிமன்றம் ஏப்ரல் 16க்குள் தடை செய்ய மத்திய அரசினை கேட்டுக் கொண்டது. நீதிமன்றம் டிக்டாக் “ஆபத்தான அம்சம்” மற்றும் “பொருத்தமற்ற உள்ளடக்கத்தை” கொண்டுள்ளதாக கூறியிருந்தது. 

சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு அதிமுக எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி டிக்டாக் மீது தடைவிதிக்க வேண்டும் என்று கோரினார்.

Advertisement

 டிக்டாக் ஆப் 2019 ஆம் ஆண்டு சமூக வலைதள வீடியோ ஆப்பாக தொடங்கப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் இதன் தரவிறக்கம் ஒரு பில்லியனை எட்டியது.   

Advertisement