This Article is From Sep 05, 2019

செல்போன்கள் திருட்டு வழக்கில் 'டிக்டாக்' நட்சத்திரம் கைது - ரசிகர்கள் அதிர்ச்சி!!

பிரபல சமூக வலைதள செயலியான டிக்டாக்கில் பிரபல நட்சத்திரமாக இருப்பவர் ஷாரூக்கான். இவர் அடிக்கடி நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தியுள்ளார்.

செல்போன்கள் திருட்டு வழக்கில் 'டிக்டாக்' நட்சத்திரம் கைது - ரசிகர்கள் அதிர்ச்சி!!

டிக்டாக்கில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஷாரூக்கானுக்கு ரசிகர்களாக உள்ளனர்.

Greater Noida:

பிரபல சமூக வலைதள செயலியான டிக்டாக்கில் நட்சத்திரமாக இருக்கும் ஷாரூக்கான் என்பவரும் அவரது மூன்று நண்பர்களும் இன்று காலை திருட்டு வழக்கு ஒன்றில் கைதாகி உள்ளனர். டெல்லி அருகேயுள்ள உத்தரப்பிரதேசத்தில் கிரேட்டர் நொய்டா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கைதான ஷாரூக்கான் மற்றும் அவரது நண்பர்களிடம் இருந்து 5 செல்போன்கள், ஒரு பைக் மற்றும் ரூ. 3,250 ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டிக்டாக் ஆப்பில் ஷாரூக்கானுக்கு 40 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

டான்ஸ் ஸ்டெப்புகளை டிக்டாக்கில் பதிவிட்டு அதன்மூலம் ரசிகர்களை சேர்த்துள்ளார் ஷாரூக்கான். இதற்கு அவர்களது நண்பர்களும், திருட்டு வழக்கில் சிக்கியவர்களான ஆசிப், பைசான், முகேஷ் ஆகியோர் உதவி செய்திருக்கிறார். 
 

qip7thjc

.

கைது குறித்து காவல்துறை அதிகாரி ரன்விஜய் சிங் கூறுகையில், 'கிரேட்டர் நொய்டாவின் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் உதவியால் திருடர்களை பிடித்துள்ளோம். நடைபாதையில் நடந்து செல்பவர்களிடம் இருந்து செல்போன்களையும், பணத்தையும் கைதானவர்கள் பறித்துள்ளனர்' என்றார். 

விசாரணையின்போது கைதான 4 பேரும் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு 6 வழக்குகளில் தொடர்பிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

With inputs From ANI)

.