Read in English
This Article is From Mar 04, 2020

Salt Challenge: ‘டிக் டாக்’-ன் இந்த லேட்டஸ்ட் டிரெண்ட் ஆபத்தானது- ஏன்?

TikTok Viral - இன்னொரு டிக் டாக் பயனர், “ஒரு கப் ஆஃப் சால்ட் முயல வேண்டுமா?” எனக் கிண்டலாகக் கேள்வி எழுப்பியுள்ளார்

Advertisement
விசித்திரம்

Salt Challenge: ஆனால் ஜோனத்தன் என்னும் இன்னொரு பயனரோ, “சால்ட் சேலஞ்ச்! மிக மோசமாக உள்ளது” என்று கடுப்பாகியுள்ளார். 

Highlights

  • டிக் டாக்-ல் வைரலாகி வருகிறது சால்ட் சேலஞ்ச்
  • இதன் மூலம் ஒரு டப்பா சால்ட்-ஐ பயனர்கள் வாயிக் கொட்டுகிறார்கள்
  • பலரும் இந்த சேலஞ்சில் பங்கெடுத்து வீடியோ பகிர்கிறார்கள்

TikTok Viral - டிக் டாக் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வரும் ஒரு விஷயம்தான் ‘சால்ட் சேலஞ்ச்' (Salt Challenge). இதற்கு முன்னர் டிக் டாக்-ல் பல வினோதமான சேலஞ்சுகள் டிரெண்டாகி சர்ச்சையாகி இருக்கின்றன. ஆனால், இது அனைத்திற்கும் உச்சபட்சமாக இருக்கிறது. 

இந்த சேலஞ்ச் மூலம் டிக் டாக் பயனர்கள், ஒரு டப்பாவில் இருக்கும் உப்பை நேரடியாக வாயில் கொட்டுகிறார்கள். இந்த சேலஞ்சில் ஈடுபட்டு பலர் வீடியோக்களை டிக்-டாக்-ல் பகிர்ந்துள்ளனர். ஆனால், இந்த சேலஞ்சில் பங்கேற்பது உயிருக்கே ஆபத்தாகலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

டிக் டாக் பயனர் லேண்டன், அந்த செயலியில் பகிர்ந்திருந்த ஒரு வீடியோவில், ஒரு டப்பாவில் இருக்கும் உப்பு மொத்தத்தையும் தன் வாயில் கொட்டுகிறார். ஒரு சில வினாடிகளில் வாயில் கொட்டிய உப்பைக் கரிப்புத் தாங்க முடியாமல் வெளியே துப்புகிறார். வீடியோவடன், ‘வேறு யாராவது இதை முயன்று பாருங்களேன்,' என எழுதியுள்ளார். 

@okayimjonathan

salt challenge!! this was disgusting ???? ##foryoupage##foryou##featurethis##viral

♬ original sound - okayimjonathan

இன்னொரு டிக் டாக் பயனர், “ஒரு கப் ஆஃப் சால்ட் முயல வேண்டுமா?” எனக் கிண்டலாகக் கேள்வி எழுப்பியுள்ளார். 

Advertisement

ஆனால் ஜோனத்தன் என்னும் இன்னொரு பயனரோ, “சால்ட் சேலஞ்ச்! மிக மோசமாக உள்ளது” என்று கடுப்பாகியுள்ளார். 


 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement