148 ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
New Delhi: நாடு முழுவதும் 267 ரயில்களின் நேரத்தை வடக்கு ரயில்வே நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளது. மாற்றப்பட்ட புதிய நேரம் இன்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது.
புதுடெல்லி - சண்டிகர் - புதுடைல்லி மற்றும் புதுடெல்லி - லக்னோ - புதுடெல்லி ஆகிய வழித் தடங்களில் 2 தேஜஸ் ரயில்கள் புதிதாக இயக்கப்படுகின்றன.
இதேபோன்று டேராடூன் - டெல்லி நந்தா தேவி எக்ஸ்ப்ரஸ் ரயிலை ராஜஸ்தானின் கோட்டா வரைக்கும், அலிகார் - மொராதாபாத் பயணிகள ரயிலை கஜ்ராலா வரைக்கும் வடக்கு ரயில்வே நிர்வாகம் நீட்டித்துள்ளது.
மொத்தம் 148 ரயில்களின் புறப்பாடு நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 93 ரயில்களை வழக்கத்தை விட முன் கூட்டியும், 55 ரயில்கள் வழக்கத்தை விட சற்று காலம் தள்ளியும் இயக்கப்படுகின்றன.
இதேபோன்று 118 ரயில்களின் வருகை நேரம் மாற்றப்பட்டுள்ளது. இவற்றில் 57 ரயில்கள் முன்கூட்டியும், 61 ரயில்கள் காலம் தள்ளியும் வழக்கத்திற்கு மாற்றமாக வந்தடைகின்றன.