Read in English
This Article is From Dec 04, 2018

மோடிக்கும், ஆப்கானுக்கும் ஆதரவு: பாகிஸ்தானை எச்சரிக்கும் ஐநா!

கடுமையான விமர்சனத்தை பாகிஸ்தான் மீது ஐநாவின் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மாட்டிஸ் வைத்துள்ளார்

Advertisement
உலகம்
New Delhi:

தெற்காசிய நாடுகளின் அமைதிக்காக எல்லா நாடுகளும் 40 ஆண்டுகளாக உழைத்துக்கொண்டிருப்பது போதும் என்று கடுமையான விமர்சனத்தை பாகிஸ்தான் மீது ஐநாவின் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மாட்டிஸ் வைத்துள்ளார். "பாகிஸ்தானிடம் எல்லோரும் இப்போது ஐநாவின் செயல்களை ஆதரிக்க வேண்டும். அதேபோல் பிரதமர் மோடியையும், ஆப்கானிஸ்தானின் முயற்சியையும் ஆதரிக்க வேண்டும்.

நாங்கள் எல்லா பொறுப்பான நாடுகளும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். துணை கண்டத்தில் ஆப்கானிஸ்தானில் 40 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. அதில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். நாங்கள் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைதி பேச்சு வார்த்தைக்காக நாங்கள் அழைத்துள்ளோம்.

இதுதான் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான நேரம். ஐநா, இந்தியா, ஆப்கான் மற்றும் யாரெல்லாம் அமைதியை விரும்புகிறார்களோ அவர்கள் அனைவரும் நம்மோடு இணைந்து அமைதியான உலகத்தை உருவாக்குவோம் என்றார்" ஜிம் மாட்டிஸ்.

"நாம் அனைவரும் ஒரே பாதையில் செயல்பட்டு ஆப்கானிஸ்தான் மக்களை பாதுகாக்க வேண்டியது நம் கடமை" என்றார்.

மாட்டிஸிடம் இம்ரான்கான் ட்ரம்பிடம் ஆப்கானிஸ்தானில் அமைதிக்கான உதவியை அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளாரே என்ற கேள்விக்கு இந்த பதிலை மாட்டிஸ் அளித்துள்ளார்.

Advertisement
Advertisement