Read in English
This Article is From Jul 11, 2020

'கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்'- நிதிஷுக்கு பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தல்

பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல்  வரும் அக்டோபர்  - நவம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 

Advertisement
இந்தியா

தேர்தலில் பாஜகவும், ஐக்கிய ஜனதா தள கட்சியும் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Patna:

தேர்தலை விட கொரோனாவை கட்டுப்படுத்துவதில்  கவனம் செலுத்துங்கள் என்று பீகார்  முதல்வர் நிதிஷ் குமாருக்கு பிரபல தேர்தல் திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-

நாட்டின் மற்ற மாநிலங்களைப் போன்று பீகாரிலும் கொரோனா பாதிப்பு மிகக் கடுமையாக உள்ளது. ஆனால் பீகார் அரசும், அரசு எந்திரங்களும் அடுத்த தேர்தலுக்காக தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறது. 

நிதிஷ் குமார் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களின் உயிரை ஆபத்தில் தள்ளிவிடக் கூடாது.

Advertisement

இவ்வாறு அவர் தெரிவித்தார். ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ்குமாரின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த பிரசாந்த் கிஷோர், கட்சியின் துணைத் தலைவராக பொறுப்பில் இருந்தார். 

பின்னர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட மோதலால் அவர் கட்சியில் இருந்து வெளியேறினார். தற்போது அவர், எல்.ஜே.பி. தலைவர் சிராக் பாஸ்வான், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரைப் போன்று பீகார் அரசை எதிர்த்து விமர்சித்து வருகிறார். 

Advertisement

பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல்  வரும் அக்டோபர்  - நவம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 

இந்த தேர்தலில் பாஜகவும், ஐக்கிய ஜனதா தள கட்சியும் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தை நடந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement