Read in English
This Article is From Jul 09, 2020

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட 89 செயலிகளை நீக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவு!

இந்தியா - சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, டிக் டாக், யூசி பிரவுசர், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்ததை தொடர்ந்து, ராணுவ வீரர்களுக்கான புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Advertisement
இந்தியா

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட 89 செயலிகளை நீக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவு! (File photo)

Highlights

  • ஃபேஸ்புக் உள்ளிட்ட 89 செயலிகளை நீக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவு
  • 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது.
  • இந்திய ராணுவம் தகவல்கள் கசிவதை தடுக்கும் வகையில், நடவடிக்கை
New Delhi:

இந்திய ராணுவ வீரர்கள் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட 89 செயலிகளை தங்களது ஸ்மார்ட்போன்களிலிருந்து நீக்குமாறு இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

லடாக் எல்லையில் இந்தியா - சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, டிக் டாக், யூசி பிரவுசர், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்ததை தொடர்ந்து, ராணுவ வீரர்களுக்கான புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தற்போது ராணுவ வீரர்களை நீக்க உத்தரவிட்டுள்ள இந்த 89 செயலிகளில், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி தடை செய்யப்பட்ட சில செயிலிகளும் உள்ளடங்குகின்றன. 

இந்திய ராணுவம் தகவல்கள் கசிவதை தடுக்கும் வகையில், வீரர்களை தங்களது ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ள அந்த செயலிகள் பட்டியலில், ஃபேஸ்புக், டிக்டாக், ட்ரூ காலர், இன்ஸ்டாகிராம், வி சாட், ஹலோ சாட், ஷேர் சாட், வைபர், ஹைக், ஷேர் ஹிட், செண்டெர், சமோசா, கவாலி, சாப்யா, யூசி பிரவுசெர், யுசி பிரசெர் மினி, ஷூம், கேம் ஸ்கேன்னர், பியூட்டி பிளஸ், பப்ஜி, கிளாஸ் ஆஃப் கிங்ஸ், மொபைல் லிஜெண்ட்ஸ், கிளப் ஃபேக்டரி, அலி எக்ஸ்பிரஸ், டிண்டெர், ஒகே கப்பிட், பாடோ, பம்பிள், டெய்லி ஹண்ட், நியூஸ் டாக், 360 செக்யூரிட்டி, ஸ்நாப் சாட், தம்பிர், ரெட்டிட், ஹங்காமா உள்ளிட்ட 89 செயலிகள் இடம்பெற்றுள்ளன. 
 

Advertisement
Advertisement