Read in English
This Article is From Jul 17, 2020

அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு கொரோனா: தரிசனத்தை நிறுத்தும் திட்டமில்லை: திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி தேவஸ்தானத்தின் பிராமண எதிர்ப்பு கொள்கைக்கு கீழ்படிந்து அதனை பின்பற்றுகிறோம். இதுதொடர்ந்து நீடித்தால் பேரழிவு தான்..

Advertisement
இந்தியா ,

Tirupati: அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு கொரோனா: தரிசனத்தை நிறுத்தும் திட்டமில்லை: திருப்பதி தேவஸ்தானம்

Highlights

  • அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு கொரோனா: தரிசனத்தை நிறுத்தும் திட்டமில்லை
  • திருப்பதி கோயிலில் 14 அர்ச்சகர்கள் உட்பட 140 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • மூத்த அர்ச்சகர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் - தேவஸ்தானம்
New Delhi:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட விவகாரம் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், பக்தர்கள் தொடர்ந்து தரிசனம் மேற்கொள்ள வருகை தரலாம் என திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கோவில்களும் திறக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து, படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, ஜூன் மாத இடையே பக்தர்கள் தரிசனத்திற்கு கோவிலை மீண்டும் திறக்க தேவஸ்தானம் முடிவு செய்தது. தினசரி பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, திருப்பதி கோயிலில் 14 அர்ச்சகர்கள் உட்பட 140 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுப்பதற்கு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் கூறி வரும் நிலையில், இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி கூறும்போது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் 70 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில், தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர், கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆந்திர பிரதேச காவலர்கள் ஆவார்கள். அதில், ஒரே ஒருவக்கு மட்டுமே தீவிரமான அறிகுறிகள் உள்ளது. 

அதனால், கோவிலை மூடுவதற்கு எந்தவொரு திட்டமுமில்லை. தொடர்ந்து, மூத்த அர்ச்சகர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். அர்ச்சர்களுக்கும், ஊழியர்களுக்கும் தனியாக தங்குமிடம் கோரியுள்ளனர். அவர்களுக்கான தனியான தங்குமிடமும், அவர்களுக்கு உணவு வழங்குவதற்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, திருப்பதியில் கெளரவ தலைமை அர்ச்சகராக உள்ள ரமணா திக்ஷித்லு அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் கவலை தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், 50 அர்ச்சகர்களில் 15 அர்ச்சகர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும், 25 அர்ச்சர்களின் சோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. திருப்பதி தேவஸ்தானம் தரிசனத்தை நிறுத்த மறுப்பு தெரிவித்துள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்தின் பிராமண எதிர்ப்பு கொள்கைக்கு கீழ்படிந்து அதனை பின்பற்றுகிறோம். இதுதொடர்ந்து நீடித்தால் பேரழிவு தான்.. தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை மேற்கோள் காட்டி அவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். 

Advertisement

இதுகுறித்துதேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி கூறும்போது, கெளரவ தலைமை அர்ச்சகர் சமூகவலைதளத்தில் தனது கருத்தை தெரிவிப்பதற்கு பதிலாக, திருப்பதி தேவஸ்தானத்திடம் தனது பரிந்துரையை தெரிவித்திருக்கலாம் என்று கூறியுள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 10 லட்சத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவு 34,956 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 687 பேர் வரை உயரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

Advertisement

இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது, 1,003,832 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையானது 25,602 ஆக உயர்ந்துள்ளது. 6.35 லட்சத்திற்கும் அதிகமானோர் அல்லது 63.34 சதவீதம் பேர் வரை குணமடைந்துள்ளனர். 

Advertisement