This Article is From Feb 06, 2019

‘மாற்றி மாற்றிப் பேசும் பாமக; அதிமுக-வை மிரட்டும் பாஜக!’- சீறும் திருமா

மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், தமிழகம் மற்றும் தேசிய அளவில் கூட்டணி காய் நகர்த்தல்கள் நடந்து வருகின்றன.

Advertisement
தமிழ்நாடு Posted by

தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் அதிமுக தலைமையில் அமையப் போகும் கூட்டணிக்கும் பலத்தப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Highlights

  • பாமக குறித்து கடுமையாக சாடியுள்ளார் திருமா
  • பாஜக-வையும் அதற்கு இணையாக தூற்றியுள்ளார் திருமா
  • திமுக கூட்டணியில் விசிக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், தமிழகம் மற்றும் தேசிய அளவில் கூட்டணி காய் நகர்த்தல்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் அதிமுக தலைமையில் அமையப் போகும் கூட்டணிக்கும் பலத்தப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதிமுக, விடுதலைச் சிறுத்துகள் போன்ற கட்சிகளும், திமுக கூட்டணியில் இடம் பெறும் என்று தெரிகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக அரசியல் சூழல் குறித்து பேசியுள்ளார். 

திருமா பேசும்போது, ‘தமிழகத்தில் பாஜக-வுடன் கூட்டணி சேர எந்தக் கட்சியும் விரும்பவில்லை. தற்போது அவர்களோடு நட்போடு செயல்பட்டு வரும் அதிமுக கூட அதை விரும்பவில்லை. ஆனால், அதிமுக-வை மிரட்டி தனது கூட்டணியில் சேர்க்க வைக்க வேண்டும் என்று மோடி தலைமையிலான அரசு, பாஜக கட்சி முயற்சி எடுத்து வருகிறது. அவர்களது எண்ணத்துக்கு அதிமுக துணை போகாது என்றுதான் கருதுகிறேன்' என்றார். 

தொடர்ந்து அவர் பாமக குறித்து பேசுகையில், ‘பாட்டாளி மக்கள் கட்சி, காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றும் பேசும். தேர்தலுக்குத் தேர்தல் திராவிடக் கட்சிகளுடனும், தேசியக் கட்சிகளுடனும்தான் அவர்கள் கூட்டணி வைப்பார்கள். ஆனால், அந்தக் கட்சிகளையே தேர்தலுக்குப் பின்னர் வரம்பில்லாமல் விமர்சிப்பார்கள்' என்று கூறினார். 

Advertisement
Advertisement