हिंदी में पढ़ें Read in English
This Article is From Aug 16, 2019

திருடர்களை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருது!

அவர்களுக்கு 2 லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் அதீத துணிவுக்கான விருதையவும் வழங்கினார் முதல்வர் பழனிசாமி. 

Advertisement
தமிழ்நாடு Edited by

இந்த பரபரப்பான காட்சிகள், வீட்டிலிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

Chennai:

நெல்லையில், கொள்ளையர்கள் இருவரை, வயதான தம்பதியர் துணிச்சலாக போராடி துரத்திய சம்பவம் குறித்தான சிசிடிவி காட்சிகள் கடந்த வாரம் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. திருடர்களை விரட்டியடித்த தம்பதிக்குத் தொடர் பாராட்டுகள் குவிந்துவந்த நிலையில், அவர்களின் வீரதீர செயலுக்கு ‘அதீத துணிவுக்கான' விருது வழங்கப்பட்டது. சுதந்திர தினமான நேற்று இவ்விருதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெல்லை தம்பதிக்கு வழங்கினார். 

நேற்று நடந்த சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் நெல்லை தம்பதியான பி.சண்முகவேலு மற்றும் செந்தாமரை கலந்து கொண்டனர். அவர்களுக்கு 2 லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் அதீத துணிவுக்கான விருதையவும் வழங்கினார் முதல்வர் பழனிசாமி. 

இதுகுறித்து வெளியான சிசிடிவி காட்சியில், சண்முகவேல் 70, தனது வீட்டின் வாசலில் அமர்திருந்தார். அப்போது, திடீரென அங்கு முகமூடி அணிந்து வந்த 2 கொள்ளையர்களில் ஒருவர், துணியால் சண்முகவேலின் கழுத்தை இறுக்க முயற்சி செய்கிறார். 
 

Advertisement

அரிவாளால் வெட்ட வந்த திருடர்களை விரட்டியடிக்கும் சண்முகவேலு, செந்தாமரை

அப்போது அவர் கூச்சலிட்ட சத்ததைக் கேட்டு வெளியே வந்த அவரது மனைவி செந்தாமரை, திருடர்களை பார்த்து பதறுகிறார். இருப்பினும், சமர்த்தியமாக கீழே கிடந்த செருப்பு, பிளாஸ்டிக் நாற்காலிகளை தூக்கி எறிந்து, கொள்ளையர்களை விரட்ட முயற்சிக்கிறார்.

இதனால், திருடர்கள் செய்வதறியாது திணறுகின்றனர். இந்த சமயத்தில் சுதாரித்துக் கொண்ட சண்முகவேல், திருடனின் பிடியில் இருந்து விலகி, அவரும் நாற்காலி உள்ளிட்ட பொருட்களை திருடர்கள் மீது தூக்கி எறிகிறார். அதன் பின்னரும் அங்கிருந்து ஓடாத கொள்ளையர்கள், அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர். 

Advertisement

ஆனாலும் அவர்களின் மிரட்டலுக்கு அஞ்சாத கணவனும், மனைவியும் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம், தூக்கி கொள்ளையர்கள் மீது வீசுகின்றனர். இதைத்தொடர்ந்து, சுதாரித்துக்கொண்ட திருடர்கள் செந்தாமரை கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியை மட்டும் பறித்து கொண்டு தப்பி ஒடி சென்றனர். இந்த பரபரப்பான காட்சிகள், வீட்டிலிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
 

Advertisement