This Article is From Jul 02, 2018

ஏற்றுமதி விலை குறைவால், திருப்பூர் பின்னலாடை தொழிலில் பின்னடைவு

ஏற்றுமதி நிறுவனத்தில் தையல் வேலைக்கு செல்பவருக்கு, மாதம் 15,000 ரூபாயில் இருந்து 7,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது

Tirupur:

திருப்பூர்: இந்தியாவின் பின்னலாடைகளின் தலைநகரம் என அழைக்கப்படும் திருப்பூரில், ஏற்றுமதிகள் குறைந்துள்ளதால் வேலை வாய்ப்புகள் பாதிப்படைந்துள்ளன

தமிழ்நாடு மாநிலம் திருப்பூர் மாவட்டத்தின் ஏற்றுமதி மதிப்பு 26,000 கோடி ரூபாயில் இருந்து 24,000 ரூபாய் கோடியாக குறைந்துள்ளது. சீனா, வியட்நாம், வங்கதேசம்,இலங்கை, பாகிஸ்தான், கம்போடியா ஆகிய நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்டும் குறைந்த விலை சரக்குகளால், திருப்பூர் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

“மற்ற நாடுகளின் ஏற்றுமதி விலை திருப்பூரை விட 10 சதவிதம் குறைந்ததாக உள்ளது. மற்ற நாடுகளுடன் போட்டியிட விலையை குறைப்பதனால், தொழிலில் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது” என்று திரு.குமார் துரைசாமி, தலைமை நிர்வாகி, ஈஸ்டர்ன் க்ளோபல் க்ளோதிங் தெரிவித்தார்.

tirupur

இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பில் இருந்து திருப்பூர் ஏற்றுமதி தொழிலில் சரிவை சந்தித்து வருகிறது. மேலும், ஜிஎஸ்டி வரி அமல்படுத்திய பிறகு, உள்ளூர் சந்தையிலும் வெளிநாட்டு சந்தையிலும் திருப்பூரின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது

“இந்த நடவடிக்கைகளினால் ஏற்பட்ட தொழில் பாதிப்புகளில் இருந்து வெளிவர சரியான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என்று திரு.செந்தில் குமார், நிர்வாக இயக்குனர், ப்ரீமியர் ஏற்றுமதி நிறுவனம் தெரிவித்தார்.

ஏற்றுமதி நிறுவனத்தில் தையல் வேலைக்கு செல்பவருக்கு, மாதம் 15,000 ரூபாயில் இருந்து 7,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.  இதனால், தினசரி வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தையல் பணியாளர் கபிர் அஹமத் வருத்தம் தெரிவித்தார்.

திருப்பூர் ஆடை தொழிலில், 6 லட்சம் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தேவையான மருத்துவ வசதி, போக்குவரத்து, இட வசதிகள் இல்லை என்பது உண்மை. பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலாளர்களின் போக்குவரத்து செலவிற்கு, தினம் ஒரு பணியாளருக்கு 90 ரூபாய் செலவு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

tirupur

“முன்பு வாரம் ஐந்து முதல் ஆறு நாட்கள் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், தற்போது இரண்டு நாட்கள் வேலை மட்டுமே கிடைக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், தையல் பணியை விடுத்து, வேறு வேலையை தேட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவேன்” என்றார்

“இந்த நிலைமை எங்கள் தொழிக்கு விழுந்த பெரும் அடியாக கருதுகிறேன்.வாய்ப்புகள் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. நீரவ் மோடியின் நிறுவனத்திற்கு AAA ரேட்டிங் அளித்துள்ள அரசு, சிறு தொழில் வியாபாரிகளின் தொழில்களுக்கு B ரேட்டிங் அளித்துள்ளது” என்று திரு.சக்திவேல், நிர்வாக செயலாளர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்தார். குறிப்பாக, பெரும்பாலான உள்ளூர் வங்கிகள் சிறு தொழில் செய்பவர்களுக்கு வங்கி கடன் அளிக்க மறுக்கிறது. இதனால், நிறுவனங்கள் தொழில் செய்ய பாதிக்கப்படுகின்றனர்.

.