Tiruvallur MP - தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக செய்திகள் வருகின்றன.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழைக் காலம் முடிவடைந்துள்ள நிலையில், பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உறிப்பினர், ஜெயக்குமார், தனது தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய மாவட்டத்தில் இருக்கும் தலைமை அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அங்கு அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதியாகியுள்ள நோயாளிகளை சந்தித்து, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து, “திருவள்ளூர் தொகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யவே இங்கிருக்கும் தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்தேன். இங்கு அனுமதியாகி உள்ளவர்களுக்கு சாதாரண காய்ச்சல் இருப்பதாகத்தான் தெரிகிறது.
சிலருக்கு டெங்கு வருவதற்கான அறிகுறிகள் இருக்கின்றன. ஆனால், அது உறுதி செய்யப்படவில்லை. பொதுவாக திருவள்ளூரில் டெங்கு பாதிப்பு இல்லை. புள்ளி விவரங்களையும் நான் ஆராய்ந்தேன். அதன் அடிப்படையில், டெங்கு பாதிப்பு இல்லை எனத் தெரிகிறது.
பொது மக்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்தார்.