திருவண்ணாமலை, வழவச்சனூரில் இருக்கும் தமிழக அரசின் வேளாண் கல்லூரியில் பணி புரிந்து வரும் உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார் அந்தக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பயின்று வரும் மாணவி.
கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வரும் அந்த மாணவி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘உதவி பேராசிரியர் எனக்குத் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்தார். அவர் சொல்லும்படி கேட்டால் வாழ்க்கையில் முன்னுக்கு வந்துவிடலாம் என்று என்னிடம் அவர் பேசினார். அதை நான் மறுத்துவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.
இது குறித்து மாணவி, மாவட்ட நீதிபதி மகிழேந்தியிடம் வாக்குமூலம் அளித்தார். இந்த விவகாரம் குறித்து உள்ளூர் போலீஸ் விசாரித்து வருகிறது. மகிழேந்தி பத்திரிகையளர்களிடம் பேசியபோது, ‘ஒரு உதவி பேராசிரியர் இப்படி நடந்து கொண்டிருப்பது அறுவறுக்கத்தக்கது’ என்று கருத்து கூறியுள்ளார். நீதிபதி, சம்பந்தப்பட்ட மாணவியை வேறு கல்லூரிக்கு மாற்றுமாறும், போலீஸை கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து போலீஸ் தரப்பு, ‘இந்த சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணையை நடத்தியுள்ளோம். கல்லூரி மற்றும் விடுதியிலும் சோதனைச் செய்துள்ளோம். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)