Read in English
This Article is From Oct 16, 2018

திமுக மக்கள் தொடர்பு செயலாளர் பதிவியிலிருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் நீக்கம்… காரணம் என்ன?

திமுக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜ்யசபா எம்.பி-யுமான டி.கே.எஸ்.இளங்கோவன், அக்கட்சியின் மக்கள் தொடர்பு செயலாளர் பதிவியிலிருந்து நீக்கம்

Advertisement
தெற்கு

இது குறித்து திமுக-வின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது

Chennai:

திமுக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜ்யசபா எம்.பி-யுமான டி.கே.எஸ்.இளங்கோவன், அக்கட்சியின் மக்கள் தொடர்பு செயலாளர் பதிவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. 

இது குறித்து திமுக-வின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கழகத்தின் மக்கள் தொடர்பு செயலாளராக இருந்த டி.கே.எஸ்.இளங்கோவன், அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார்’ என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீக்கத்தற்கான காரணம் என்னவென்று வரையறுக்கப்படவில்லை.

அக்டோபர் 13 ஆம் தேதி, திமுக சார்பில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் குறித்த 23 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து கட்சி சார்பில் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கக் கூடிய 13 பேர் கொண்டவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இரண்டிலும் இளங்கோவனின் பெயர் இருந்தது. இந்நிலையில், அவர் மக்கள் தொடர்பு செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது கவனம் பெறுகிறது. 

இது குறித்து நாம் திமுக வட்டாரத்தில் விசாரித்தோம். ‘இது வழக்கமாக நடக்கும் ஒரு நடைமுறை தான். ஒரு பொறுப்பிலிருந்து வேறொரு பொறுப்புக்கு கட்சி உறுப்பினர் மாற்றப்படும் போது இதைப் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வழக்கமே’ என்று தகவல் தெரிவித்துள்ளது கட்சி வட்டாரம். 

Advertisement
Advertisement