This Article is From May 08, 2019

+1 தேர்வு முடிவுகள்! முதலிடத்தில் ஈரோடு - வேலூருக்கு கடைசி இடம்!! Live Updates!!

tnresults.nic.in. என்ற இணைய தளத்தில் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

+1 தேர்வு முடிவுகள்! முதலிடத்தில் ஈரோடு - வேலூருக்கு கடைசி இடம்!! Live Updates!!

லைவ் அப்டேட்ஸ்களை இந்த செய்தியில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

New Delhi:

 தமிழகத்தில் ப்ளஸ் ஒன் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. +2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்று +1 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

காலை சரியாக 9.30-க்கு +1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை  அதிகாரப்பூர்வ இணைய தளங்களான tnresults.nic.in மற்றும்  dge.tn.nic.in ஆகியவற்றில் தெரிந்து கொள்ளலாம். 

May 08, 2019 12:26 (IST)
பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்:
----------------------------------------------------------

அரசுப்பள்ளிகள் - 90.6%
அரசு உதவி பெறும் பள்ளிகள் - 96.9%
மெட்ரிக் பள்ளிகள்  - 99.1%
இரு பாலர் பள்ளிகள் -95.1%
பெண்கள் பள்ளிகள் - 96.8%
ஆண்கள் பள்ளிகள் - 90.2%
May 08, 2019 12:17 (IST)
  ரி-வேல்யூஷனை பொறுத்தளவில் உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ. 305-ம், மற்ற பாடங்களுக்கு ரூ. 205-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை +1 தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது பள்ளியிலேயே செலுத்தலாம்
May 08, 2019 11:56 (IST)
விடைத்தாள் நகலைப் பெற பாடம் ஒன்றுக்கு ரூ. 275 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
May 08, 2019 11:43 (IST)
மாணவர்கள் தங்களது மதிப்பெண்கள் குறைவதாக கருதினாலோ, அல்லது குறிப்பிட்ட பாடத்தில் தோல்வி அடைந்தாலோ அதற்கு மறு கூட்டலுக்கு விண்ணப்பம் செய்வார்கள். இதற்காக வரும் 10,11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் (Revalution) விண்ணப்பம் செய்யலாம். 
May 08, 2019 11:33 (IST)
 +1-ல் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வை எழுதாதவர்களுக்கு ஜூன் 14 முதல் 21-ம்தேதி வரை சிறப்பு தேர்வுகள் நடைபெறுகிறது. இதுகுறித்த விவரம் விரைவில் வெளியாகும்.
May 08, 2019 11:22 (IST)

ஒரிஜினல் PDF சான்றிதழ்களை 16-ம்தேதி பிற்பகல் முதல் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம். 


May 08, 2019 11:16 (IST)
அச்சடிக்கப்பட்ட ஒரிஜினல் சான்றிதழ்கள் 14-ம்தேதி செவ்வாய்க் கிழமை மதியத்தில் இருந்து தாங்கள் படித்த பள்ளியில் இருந்து மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். 
May 08, 2019 11:11 (IST)
மதிப்பெண் பட்டியலை முதலில் இணைய தளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம். இது 14-ம்தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். 
May 08, 2019 11:02 (IST)
பாடம் வாரியாக தேர்ச்சி விகிதம் :

1. மொழிப்பாடம் (முதன்மை மொழி) - 97.5%

2. ஆங்கிலம் - 97.6%

3. கணினி அறிவியல் 98.2%

4. வணிகவியல் 97.7%

5. கணக்குப் பதிவியல்97.7%

6. வரலாறு 95.1%

7. இயற்பியல் 94.6% 

8. வேதியியல் 95.7%

9. உயிரியல் 97.1% 

10. கணிதம் 96.9%

11. தாவிரவியல் 91.1% 

12. விலங்கியல் 93.0%

May 08, 2019 10:51 (IST)
மெட்ரிக் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 99.1-ஆக உள்ளது
May 08, 2019 10:33 (IST)
தேர்ச்சி வீதத்தில் கடைசி 3 இடங்களை பிடித்த மாவட்டங்கள்:

1. வேலூர் - 89.29 %

2. கடலூர் - 89.76%

3. கிருஷ்ணகிரி - 90.93 %
May 08, 2019 10:28 (IST)
தேர்ச்சி வீதத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாவட்டங்கள்:

1. ஈரோடு - 98.08%

2. திருப்பூர் - 97.90%

3. கோவை - 97.60%
May 08, 2019 10:21 (IST)
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் (Govt Aided) தேர்ச்சி விகிதம் 96.9%
May 08, 2019 10:18 (IST)

பின் தங்கிய அரசுப் பள்ளிகள் - +1 தேர்வில் மற்ற பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் 90.6 சதவீதமே தேர்ச்சி பெற்றுள்ளது. தமிழகத்தின் சராசரி தேர்ச்சி விகிதம் 95%
May 08, 2019 10:09 (IST)
+1 தேர்வு முடிவில் 98 சதவீத தேர்ச்சியை பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.
May 08, 2019 10:02 (IST)
சிறைக் கைதிகள் தேர்ச்சி விவரம் - தேர்வு எழுதிய 78 பேரில் 62 பேர் பாஸ் செய்துள்ளனர். 
May 08, 2019 09:55 (IST)
மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சி விவரம் - தேர்வு எழுதிய 2,896 பேரில் 2,721 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
May 08, 2019 09:52 (IST)
அசத்திய மாணவர்கள்!! - கடந்த ஆண்டு 87.4 சதவீத மாணவர்களே தேர்ச்சி பெற்ற நிலையில் நடப்பாண்டில் தேர்ச்சி சதவீதம் 93.3- ஆக உயர்ந்துள்ளது. 
May 08, 2019 09:44 (IST)
மதிப்பெண் பட்டியலை முதலில் இணைய தளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம். இது 14-ம்தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். 
May 08, 2019 09:39 (IST)
2,634 பள்ளிகளில் 100 சதவீதம்பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்

May 08, 2019 09:36 (IST)
கடந்த ஆண்டில் +1 மாணவிகளின் தேர்ச்சி விழுக்காடு 94.6- ஆக இருந்தது. இந்த ஆண்டில்  96.5 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

May 08, 2019 09:32 (IST)
+1 தேர்வு எழுதிய மாணவிகளின் தேர்ச்சி  சதவீதம் 96.5. இது மாணவர்களை விடவும் 3.2 சதவீதம் அதிகம்.
May 08, 2019 09:32 (IST)
+1 தேர்வு எழுதிய மாணவர்களில் 93.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

May 08, 2019 09:31 (IST)
ப்ளஸ் ஒன் தேர்வு எழுதியவர்களில் 95 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
May 08, 2019 09:30 (IST)
ப்ளஸ் ஒன் (+1) தேர்வு முடிவுகள் வெளியானது. ரிசல்ட்டை http://www.tnresults.nic.in/, www.dge1.tn.nic.in,  www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.
May 08, 2019 09:29 (IST)
+1 தேர்வு முடிவுகள் வெளியானது
May 08, 2019 09:26 (IST)
http://www.tnresults.nic.in/ 
www.dge1.tn.nic.in
 www.dge2.tn.nic.in 
ஆகிய இணைய தளங்களில் ரிசல்ட்டை அறிந்து கொள்ளலாம்
May 08, 2019 09:21 (IST)
மாணவர்கள் தங்களது மதிப்பெண்கள் குறைவதாக கருதினாலோ, அல்லது குறிப்பிட்ட பாடத்தில் தோல்வி அடைந்தாலோ அதற்கு மறு கூட்டலுக்கு விண்ணப்பம் செய்வார்கள். இதற்காக வரும் 10,11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் விண்ணப்பம் செய்யலாம். 
May 08, 2019 09:18 (IST)
அச்சடிக்கப்பட்ட ஒரிஜினல் சான்றிதழ்கள் 14-ம்தேதி செவ்வாய்க் கிழமை மதியத்தில் இருந்து தாங்கள் படித்த பள்ளியில் இருந்து மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். 
May 08, 2019 09:13 (IST)
14-ம்தேதி பிற்பகல் முதல் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். 

May 08, 2019 09:08 (IST)
மாணவர்கள் தங்களது பள்ளிகளில் அளித்த உறுதி மொழி படிவத்தில் மொபைல் எண்ணை குறிப்பிட்டிருப்பார்கள். அந்த எண்ணுக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கப்படும். 
May 08, 2019 09:01 (IST)
தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள அனைத்து நூலகங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பெற கட்டணம் ஏதும் கிடையாது. 
May 08, 2019 08:55 (IST)
காலை 9.30-க்கு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன
.