This Article is From Sep 19, 2018

ஸ்டெர்லைட் ஆய்வு திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்: தமிழக அரசு கோரிக்கை

ஸ்டெர்லைட் (sterlite) தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆய்வு திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்

Advertisement
இந்தியா Posted by

ஸ்டெர்லைட் (Strelite) தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆய்வு திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

இது குறித்து தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

மத்திய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுப்படி மத்திய மாசு கட்டுப்பாட்டு சார்பில் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஸ்டெர்லைட் ஆலையில் வரும் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 3 நாட்கள் ஆய்வு நடத்தும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 14 ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இதேபோல் தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இதனால், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் 99 நாட்களாக நடத்திய போராட்டம் கடந்த மே 22 ஆம் தேதி கலவரமாக வெடித்தது. இதில் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசு அண்மையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. 

Advertisement

அதன்படி, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement