This Article is From Sep 14, 2020

தமிழக சட்டப்பேரவை நாளை ஒத்திவைப்பு; தனது கோரிக்கையை ஏற்க மறுப்பு என ஸ்டாலின் குற்றச்சாட்டு!

இரங்கல் தீர்ணமானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சட்டப்பேரவை நாளை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்

Advertisement
தமிழ்நாடு Written by

சபாநாயகர் தனது கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்

இன்று தொடர்ந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும கொரோனா தொற்று பாதிப்பு 50 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், மாநிலம் முழுவதும் தொற்று பரவலைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்து. ஐந்து மாதங்களுக்கு பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் மூன்று நாட்கள் கலைவானர் அரங்கில் போதிய சுகாதார முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் நடக்க திட்டமிடப்பட்டிருந்தது.

அந்த வகையில் முதல் நாள் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. இதில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முன்னாள் குடியரசு தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என அனைவருக்கும் இரங்கல் தீர்ணமானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சட்டப்பேரவை நாளை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை நாளை ஒத்தி வைக்கப்படுகின்றது.

Advertisement

சட்டப்பேரவை முடித்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்  மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தில் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட மாணவர்களையும் இணைத்து அவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என கூறியதாகவும் ஆனால் சபாநாயகர் தனது கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீட் தேர்வில் தமிழக அரசு போதிய அழுத்தத்தினை தரவில்லையென்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement
Advertisement