ஹைலைட்ஸ்
- முதலீட்டாளர்கள் மாநாடு 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது
- முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்
- தமிழக பட்ஜெட் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் பேச வாய்ப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று சென்னை தலைமை செயலகத்தில் கூடுகிறது. வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறவிருக்கிறது.
இதேபோன்று கொடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக 2 முறை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இதில் முதலீட்டார்கள் மாநாடு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி 30 நிறுவனங்கள், ரூ. 49 ஆயிரம் கோடி முதலீடு செய்ய நிர்வாக ரீதியில் அனுமதி அளிக்கப்பட்டது.
மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து தமிழக பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவிருப்பதால் அதுபற்றியும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.