This Article is From Sep 12, 2018

சுகாதார திட்டங்களுக்காக மத்திய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைந்த ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது

Advertisement
இந்தியா Posted by

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

சென்னை: சுகாதார திட்டங்களை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசுடன் புரிந்துணர்வு திட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படும் பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டம் தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது ஏழை மக்களுக்கான காப்பீட்டு திட்டமாகும்.

தமிழ்நாட்டில் மட்டும் 1.57 கோடி குடும்பங்கள் காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,027 சேவைகளுக்கு ரூ. 1 லட்சமும், 154 குறிப்பிட்ட சேவைகளுக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும்.

மாநில காப்பீட்டுத் திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தினால் 77 லட்சம் ஏழை குடும்பத்தினர் பயன்பெறுவார்கள். மாநில காப்பீட்டு திட்டத்தில் இடம்பெற்றுள்ளவர்களின் காப்பீட்டுத் தொகை, தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின்படி ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement