This Article is From Sep 13, 2018

செய்தி சேனல்களை விமர்சித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக சார்பில் நியூஸ் ஜெ என்ற செய்தி சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

செய்தி சேனல்களை விமர்சித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அதிமுகவின் செய்திச் சேனலாக இருந்த ஜெயா டிவி தற்போது டிடிவி தினகரனின் வசம் இருப்பதால் நியூஸ் ஜெ என்ற புதிய சேனலை அதிமுக கட்சி தொடங்கியுள்ளது. 

முதலமைச்சரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான கே. பழனிசாமி, துணை முதலமைச்சரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் சேனலின் லோகோவை அறிமுகப்படுத்தினர். இதே நிகழ்ச்சியில் சேனலின் மொபைல் ஆப் மற்றும் இணைய தளமும் தொடங்கி வைக்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் பேசிய முதல் அமைச்சர் பழனிசாமி, மாநிலத்தில் ஏராளமான செய்தி சேனல்கள் உள்ளன. ஆனால் அவை மக்களின் நலனுக்காக அரசின் திட்டங்களை ஒளிபரப்புவது இல்லை. ஆனால் நியூஸ் ஜெ செய்தி சேனல் அரசின் திட்டங்களை ஒளிபரப்பி மக்களுக்கு பலன் கிடைக்க வழிவகை செய்யும் என்று நம்புகிறேன். அரசின் திட்டங்களுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக செயல்பட வேண்டும் என்று செய்தி சேனல்களை கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார். 

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம், “நமது புரட்சி தலைவி அம்மா” என்ற பெயரில் நாளிதழை அதிமுக தொடங்கியது. தினகரன் நீக்கப்பட்டதால் அதிமுக கட்சியின் நாளிதழாக இருந்த “டாக்டர் நமது எம்.ஜி.ஆர்” கட்சியின் செய்திகளை புறக்கணித்தது. 
தற்போது அதிமுக கட்சிக்கென நாளிதழ், செய்தி சேனல், இணைய தளம், மொபைல் ஆப் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.