This Article is From Mar 24, 2020

பிரிகிறது நாகை மாவட்டம்; தமிழகத்தின் புதிய மாவட்டம் குறித்து அறிவிப்பு வெளியீடு!

முன்னதாக விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது.

பிரிகிறது நாகை மாவட்டம்; தமிழகத்தின் புதிய மாவட்டம் குறித்து அறிவிப்பு வெளியீடு!

அதேபோல, வேலூர் மாவட்டத்தை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என்று மூன்று மாவட்டங்களாக பிரித்தது தமிழக அரசு. 

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் 38வது மாவட்டம் குறித்து அறிவிப்பு வெளியீடு
  • நாகை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்படுகிறது
  • புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்படுகிறது

தமிழகத்தில் 37 மாவட்டங்கள் இருக்கும் நிலையில், 38வது மாவட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

முன்னதாக விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. அதேபோல, வேலூர் மாவட்டத்தை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என்று மூன்று மாவட்டங்களாகப் பிரித்தது தமிழக அரசு. 

காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் பெரிய மாவட்டமாக இருந்த திருநெல்வேலியிலிருந்து, தென்காசி தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில், விதி எண் 110-க்குக் கீழ், நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த புதிய மாவட்ட அறிவிப்பால், தமிழகத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக உயர உள்ளது. 

.