This Article is From Mar 09, 2019

‘கருணாநிதி செய்ததைச் சொன்னால்…’- எழுவர் விடுதலை விவகாரத்தில் உஷ்ணமான முதல்வர்

சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.  

‘கருணாநிதி செய்ததைச் சொன்னால்…’- எழுவர் விடுதலை விவகாரத்தில் உஷ்ணமான முதல்வர்

பிரேமலதா நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், ‘அதிமுக சார்பில் 37 எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் இருந்தும் என்ன பிரயோஜனம்’ என்று கேட்டார். 

ஹைலைட்ஸ்

  • தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேசியுள்ளார் முதல்வர்
  • கருணாநிதி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார் முதல்வர்
  • சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர்

சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.  

அதிமுக மீது தேமுதிக-வின் பிரேமலதா, நேற்று சரமாரி குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். பிரேமலதா நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், ‘அதிமுக சார்பில் 37 எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் இருந்தும் என்ன பிரயோஜனம்' என்று கேட்டார். 

அது பற்றி முதல்வரிடம் கேட்டபோது, ‘ஒரு கட்சி, எதிர்க்கட்சியாக இருக்கிறபோது, பல விமர்சனங்களை வைக்கத்தான் செய்வார்கள். ஆனால், கூட்டணிக்கு வந்தால்தான் ஒருமித்த கருத்து ஏற்படும். வைகோ, திமுக-வை வசைபாடததா. ஆனால், இப்போது அவரைப் போல திமுக-வை புகழ்வதற்கு யாரும் கிடையாது. அதைப் போலத்தான், கூட்டணிக்கு வந்தால் காட்சிகள் மாறும்' என்றார். 

தொடர்ந்து அவர் எழுவர் விடுதலை குறித்து பேசியபோது, ‘எழுவர் விடுதலை குறித்து எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ, அதை நாங்கள் செய்தோம். ஆனால் கருணாநிதி, முதல்வராக இருந்தபோது என்ன செய்தார் என்று உங்களுக்குத் தெரியுமா. அவர் மறைந்துவிட்டார். அவரைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. அதைப் பற்றியெல்லாம் வெளியே சொன்னால், நன்றாக இருக்காது. 

எழுவர் விடுதலை குறித்து என் தலைமையிலான அமைச்சரவை கூடி, குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், கருணாநிதி ஆட்சி காலத்தில் அந்த நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை. நாங்கள்தான் பேரறிவாளனுக்கு பரோல் கொடுக்க ஏற்பாடு செய்தோம். அதை திமுக செய்திருக்கிறதா. அவர்களுக்கு உணர்வுபூர்வாக எந்த அக்கறையும் இருந்ததில்லை' என்று கொதித்தார். 
 

.