This Article is From Aug 19, 2019

மக்களை நேரடியாக சந்திக்கும் ‘சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்’- தொடங்கி வைத்தார் முதல்வர்!

“76 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இந்த ‘சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்திற்காக’ ஒதுக்கப்பட்டுள்ளது."

மக்களை நேரடியாக சந்திக்கும் ‘சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்’- தொடங்கி வைத்தார் முதல்வர்!

"மக்களின் அடிப்படைப் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணும் நோக்கில்தான் இந்தத் திட்டமானது ஆரம்பிக்கப்படுகிறது."

தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் மக்களின் பிரச்னைகளை அறிந்து, அதற்கு ஏற்றவாறு குறைகளைத் தீர்க்க புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்று சேலத்தில் இத்திட்டத்தை ஆரம்பித்து உரையாற்றினார் முதல்வர் பழனிசாமி. 

சேலத்தில் உள்ள பெரிய சோரகையில் உள்ள கோயிலில் தரிசனம் செய்த பிறகு, அங்கு கூடியிருந்த மக்களிடம் மனுக்களைப் பெற்றார் முதல்வர். பின்னர் சேலம், வனவாசியில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசினார். 

அப்போது அவர், “76 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இந்த ‘சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்திற்காக' ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் குறை தீர்ப்புக் கூட்டம் தொடங்கப்படுகிறது. நகரங்கள், கிராமங்களில் நேரடியாக மக்களை சந்தித்து மனுக்களைப் பெற்று குறை தீர்க்கப்படும். 

குறைகளை சொல்லும் மனுக்களைப் பெற்ற பின்னர், 1 மாத காலத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் பிரச்னைகளை தீர்த்து வைப்பார்கள். மக்களின் அடிப்படைப் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணும் நோக்கில்தான் இந்தத் திட்டமானது ஆரம்பிக்கப்படுகிறது. கிராமங்கள், நகரங்கள் என வித்தியாசம் இல்லாமல் மக்களை நேரடியாக சந்தித்து, குறைகளுக்கான மனுக்கள் பெறப்பட்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும்” என்று பேசினார். 

.