This Article is From Oct 08, 2018

‘சென்னை சென்ட்ரலுக்கு எம்.ஜி.ஆர் பெயர்!’- பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பில் அவர், பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.

Advertisement
தெற்கு Posted by

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பில் அவர், பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது, ‘தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், முன்னாள் முதல்வர் அண்ணாதுரைக்கும் ‘பாரத் ரத்னா’ விருதை வழங்கி கவுரவிக்குமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதேபோல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக-வின் நிறுவனருமான எம்.ஜி.ஆர் பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.

அவர் வரும் இடைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, யாருடன் கூட்டணி வைக்கும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘தேர்தல் குறித்து அளிவிப்பு வெளியான பின்னர் அது குறித்து முடிவெடுப்போம்’ என்று மட்டும் கூறியுள்ளார்.

Advertisement