This Article is From Nov 11, 2018

’அரசியலில் கமலின் நடிப்பு எடுபடாது!’- முதல்வர் தாக்கு

சில நாட்களுக்கு முன்னர் கமல், தனது 64வது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடினார்

’அரசியலில் கமலின் நடிப்பு எடுபடாது!’- முதல்வர் தாக்கு

தமிழகத்தில் ஆட்சி அரியணையில் இருக்கும் அதிமுக-வுக்கும் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கும் தொடர்ந்து கருத்து மோதல் நடந்து வருகிறது. அதிமுக-வின் முக்கிய அமைச்சர்களும், நிர்வாகிகளும் பல இடங்களில் கமலை விமர்சித்து வந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமலும் தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக கருத்து கூறி வருகிறார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘கமலுக்கு 64 வயதாகிவிட்டது. திரைத் துறையிலிருந்து அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு விட்டது. மக்களும் அவரை கண்டு கொள்ளவில்லை. இப்போது அரசியலில் அவர் நாடகம் நடத்தி வருகிறார். திரைத் துறையில் 40 ஆண்டுகாலம் நடித்த பிறகே, அவர் எடுபடவில்லை. அப்படியிருக்க அரசியலில் அவரது எண்ணம் நிறைவேறாது' என்று கடுமையாக சாடியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் கமல், தனது 64வது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடினார். ஆழ்வார்பேட்டையில் நடந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கமல், ‘வருகின்ற 20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட நாங்கள் தயாராக இருப்போம்' என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார்.

.