This Article is From Feb 01, 2019

மத்திய அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவித்துள்ளது: பழனிசாமி வரவேற்பு!

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவித்துள்ளது: பழனிசாமி வரவேற்பு!

பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில், 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வரும் மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி இல்லாத நிலையில், இடைக்கால நிதி அமைச்சரான பியூஸ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் ரூ.5 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருவாய் உள்ளோருக்கு வருமான வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கபட்டுள்ளது. 5 ஏக்கருக்கு கீழ் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும் போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், மத்திய அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவித்துள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ3000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.

.