This Article is From Sep 17, 2018

பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

பல்வேறு முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “இன்று பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு அற்புதமான ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன். மேலும் பல ஆண்டுகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்

மேலும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.