This Article is From Jul 31, 2018

பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறக்க உத்தரவிட்டார் தமிழக முதல்வர்!

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறக்க உத்தரவிட்டார் தமிழக முதல்வர்!

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாயின் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய்களில் இரட்டைப்படை மதகுகள் ஆகியவற்றின் கீழ் பாசனம் பெறும் நிலங்களின் முதல் போக நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாயின் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய்களில் இரட்டைப்படை மதகுகள் ஆகியவற்றின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு 1.8.2018 முதல் 28.11.2018 முடிய 120 நாட்களுக்கு தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி, திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டம் மற்றும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டம் ஆகியவற்றில் உள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 

.