சென்னை: சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டுவதற்கு, மத்திய அரசிடம் பரிந்துரை செய்வது குறித்து பரிந்துரை செய்வது குறித்து சமீபத்தில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதேபோல் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள், ஜெயலலிதா, சி.என் அண்ணாதுரை ஆகியோருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதி உள்ளார். அதில், சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு மறைந்த புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் இரயில் நிலையம் என பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும், இதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதேபோல் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)