This Article is From Sep 22, 2020

தமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா! 76 பேர் பலி!!

இன்று மட்டும் 5,406 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,97,377 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா! 76 பேர் பலி!!

தமிழகத்தில் இன்று மட்டும் 76 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 8947  ஆக அதிகரித்துள்ளது

தமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்குக் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,52,674  ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்ட 82,928 பேரில், 5,334 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 66,40,058  பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இன்று மட்டும் 76 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 8,947 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,334 பேரில் 3,228 பேர் ஆண்களும், 2,109 பேர் பெண்களாவார்கள். இதுவரை 3,33,187 ஆண்களும், 2,19,457 பெண்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் தற்போது பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையானது 176  ஆக உள்ளது. இன்று மட்டும் 5,406 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,97,377 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,350 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். 

.