This Article is From Aug 03, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 03 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

இன்று மட்டும் 5,800 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,02,283 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 03 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

ஹைலைட்ஸ்

  • சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,02,985 ஆக அதிகரித்துள்ளது
  • சென்னையில் மட்டும் 2,176 பேர் உயிரிழந்துள்ளனர்
  • தமிழகத்தில் தற்போது 56,998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 2.63 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 58,211 மாதிரிகளில் 5,609 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 5வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அதே போல பரிசோதனை எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 2,63,222 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 5,800 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,02,283 ஆக அதிகரித்துள்ளது. இன்று 109 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இது முன்னெப்போதும் இல்லாத அளவாகும். ஒட்டு மொத்த உயிரிழப்பு 4,241 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 56,998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் 31வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,609 பேரில் 1,021 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,02,985 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,176 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் 

அரியலூர் - 20

செங்கல்பட்டு - 331

சென்னை -1,021

கோவை - 227

கடலூர் - 167

தர்மபுரி - 4

திண்டுக்கல் - 75

ஈரோடு -13

கள்ளக்குறிச்சி - 66

காஞ்சிபுரம் - 322

கன்னியாகுமரி - 215

கரூர் - 19

கிருஷ்ணகிரி - 67

மதுரை - 106

நாகை - 32

நாமக்கல் - 43

நீலகிரி - 37

பெரம்பலூர் - 19

புதுக்கோட்டை - 86

ராமநாதபுரம் - 62

ராணிப்பேட்டை - 382

சேலம் - 66

சிவகங்கை - 64

தென்காசி - 75

தஞ்சை - 146

தேனி - 305

திருப்பத்தூர் - 44

திருவள்ளூர் - 332

திருவண்ணாமலை - 212

திருவாரூர் - 18

தூத்துக்குடி - 215

திருநெல்வேலி - 85

திருப்பூர் - 45

 திருச்சி - 101

வேலூர் - 134

விழுப்புரம் - 90

விருதுநகர் - 348

மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 1,045

செங்கல்பட்டு - 15,657

சென்னை - 1,02,985

கோவை - 5,458

கடலூர் - 3,582

தர்மபுரி - 789

திண்டுக்கல் - 3,066

ஈரோடு - 767

கள்ளக்குறிச்சி - 3,906

காஞ்சிபுரம் - 10,095

கன்னியாகுமரி - 5,307

கரூர் - 579

கிருஷ்ணகிரி - 1,170

மதுரை - 11,455

நாகை - 817

நாமக்கல் - 801

நீலகிரி - 849

பெரம்பலூர் - 543

புதுக்கோட்டை - 2,471

ராமநாதபுரம் - 3,400

ராணிப்பேட்டை - 5,852

சேலம் - 3,868

சிவகங்கை - 2,534

தென்காசி - 2,397

தஞ்சை - 3,154

தேனி - 5,969

திருப்பத்தூர் - 1,278

திருவள்ளூர் - 14,750

திருவண்ணாமலை - 6,660

திருவாரூர் - 1,799

தூத்துக்குடி - 7,846

திருநெல்வேலி - 5,641

திருப்பூர் - 994

 திருச்சி - 4,517

வேலூர் - 6,376

விழுப்புரம் - 4,112

விருதுநகர் - 8,843

.