ஹைலைட்ஸ்
- இன்று மட்டும் 6,501 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்
- இன்று 108 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்
- ஒட்டு மொத்த உயிரிழப்பு 4,349 ஆக அதிகரித்துள்ளது
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 2.68 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 55,122 மாதிரிகளில் 5,063 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 6வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அதே போல பரிசோதனை எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 2,68,285 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 6,501 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,08,784 ஆக அதிகரித்துள்ளது. இன்று 108 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினத்தைத் தொடர்ந்து இன்றும் 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. ஒட்டு மொத்த உயிரிழப்பு 4,349 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 55,152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையை பொறுத்த அளவில் 32வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,063 பேரில் 1,023 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,04,027 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,202 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்
அரியலூர் - 49
செங்கல்பட்டு - 245
சென்னை -1,023
கோவை - 228
கடலூர் - 264
தர்மபுரி - 2
திண்டுக்கல் - 64
ஈரோடு -20
கள்ளக்குறிச்சி - 149
காஞ்சிபுரம் - 220
கன்னியாகுமரி - 128
கரூர் - 25
கிருஷ்ணகிரி - 25
மதுரை - 40
நாகை - 55
நாமக்கல் - 39
நீலகிரி - 14
பெரம்பலூர் - 4
புதுக்கோட்டை - 41
ராமநாதபுரம் - 47
ராணிப்பேட்டை - 79
சேலம் - 62
சிவகங்கை - 141
தென்காசி - 45
தஞ்சை - 93
தேனி - 292
திருப்பத்தூர் - 66
திருவள்ளூர் - 358
திருவண்ணாமலை - 132
திருவாரூர் - 31
தூத்துக்குடி - 189
திருநெல்வேலி - 155
திருப்பூர் - 8
திருச்சி - 83
வேலூர் - 160
விழுப்புரம் - 50
விருதுநகர் - 424
மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:
அரியலூர் - 1,094
செங்கல்பட்டு - 15,917
சென்னை - 1,04,027
கோவை - 5,688
கடலூர் - 3,846
தர்மபுரி - 791
திண்டுக்கல் - 3,131
ஈரோடு - 789
கள்ளக்குறிச்சி - 4,055
காஞ்சிபுரம் - 10,303
கன்னியாகுமரி - 5,435
கரூர் - 602
கிருஷ்ணகிரி - 1,196
மதுரை - 11,487
நாகை - 873
நாமக்கல் - 835
நீலகிரி - 852
பெரம்பலூர் - 547
புதுக்கோட்டை - 2,514
ராமநாதபுரம் - 3,449
ராணிப்பேட்டை - 5,930
சேலம் - 3,931
சிவகங்கை - 2,677
தென்காசி - 2,443
தஞ்சை - 3,243
தேனி - 6,261
திருப்பத்தூர் - 1,344
திருவள்ளூர் - 15,096
திருவண்ணாமலை - 6,793
திருவாரூர் - 1,830
தூத்துக்குடி - 8,035
திருநெல்வேலி - 5,797
திருப்பூர் - 1,000
திருச்சி - 4,603
வேலூர் - 6,526
விழுப்புரம் - 4,162
விருதுநகர் - 9,269