ஹைலைட்ஸ்
- இன்று பாதிக்கப்பட்ட 5,175 பேரில் 1,044 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்
- சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,05,004 ஆக அதிகரித்துள்ளது
- இதுவரை சென்னையில் மட்டும் 2,227 பேர் உயிரிழந்துள்ளனர்
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 2.73 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 61,166 மாதிரிகளில் 5,175 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 7வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக பரிசோதனை எண்ணிக்கையும் குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 2,73,460 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 6,031 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,14,815 ஆக அதிகரித்துள்ளது. இன்று 112 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு தினத்தைத் தொடர்ந்து இன்றும் 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. ஒட்டு மொத்த உயிரிழப்பு 4,461 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 54,184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையை பொறுத்த அளவில் 33வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,175 பேரில் 1,044 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,05,004 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,227 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்
அரியலூர் - 36
செங்கல்பட்டு - 487
சென்னை -1,044
கோவை - 112
கடலூர் - 170
தர்மபுரி - 17
திண்டுக்கல் - 71
ஈரோடு -40
கள்ளக்குறிச்சி - 18
காஞ்சிபுரம் - 342
கன்னியாகுமரி - 175
கரூர் - 50
கிருஷ்ணகிரி - 13
மதுரை - 106
நாகை - 52
நாமக்கல் - 31
நீலகிரி - 36
பெரம்பலூர் - 20
புதுக்கோட்டை - 150
ராமநாதபுரம் - 32
ராணிப்பேட்டை - 143
சேலம் - 159
சிவகங்கை - 69
தென்காசி - 121
தஞ்சை - 79
தேனி - 278
திருப்பத்தூர் - 12
திருவள்ளூர் - 472
திருவண்ணாமலை - 112
திருவாரூர் - 21
தூத்துக்குடி - 173
திருநெல்வேலி - 26
திருப்பூர் - 27
திருச்சி - 136
வேலூர் - 179
விழுப்புரம் - 77
விருதுநகர் - 67
மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:
அரியலூர் - 1,130
செங்கல்பட்டு - 16,484
சென்னை - 1,05,004
கோவை - 5,805
கடலூர் - 4,016
தர்மபுரி - 808
திண்டுக்கல் - 3,202
ஈரோடு - 829
கள்ளக்குறிச்சி - 4,063
காஞ்சிபுரம் - 10,655
கன்னியாகுமரி - 5,607
கரூர் - 654
கிருஷ்ணகிரி - 1,206
மதுரை - 11,593
நாகை - 917
நாமக்கல் - 868
நீலகிரி - 897
பெரம்பலூர் - 568
புதுக்கோட்டை - 2,666
ராமநாதபுரம் - 3,483
ராணிப்பேட்டை - 6,073
சேலம் - 4,088
சிவகங்கை - 2,742
தென்காசி - 2,564
தஞ்சை - 3,322
தேனி - 6,539
திருப்பத்தூர் - 1,356
திருவள்ளூர் - 15,570
திருவண்ணாமலை - 6,905
திருவாரூர் - 1,851
தூத்துக்குடி - 8,210
திருநெல்வேலி - 5,820
திருப்பூர் - 1,024
திருச்சி - 4,733
வேலூர் - 6,705
விழுப்புரம் - 4,239
விருதுநகர் - 9,339