This Article is From Aug 13, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,871 பேரில் 993 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

ஹைலைட்ஸ்

  • சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,12,059 ஆக அதிகரித்துள்ளது
  • இதுவரை சென்னையில் மட்டும் 2,370 பேர் உயிரிழந்துள்ளனர்
  • தமிழகம் முழுவதும் தற்போது 52,929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 3.14 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 71,575 மாதிரிகளில் 5,871 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 14வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 3,14,520 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 5,633 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,56,313 ஆக அதிகரித்துள்ளது. இன்று 119 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த 8வது நாளாக இன்றும் 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 5,278 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,871 பேரில் 993 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,12,059 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,370 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் 

அரியலூர் - 65

செங்கல்பட்டு - 439

சென்னை -993

கோவை - 294

கடலூர் - 339

தர்மபுரி - 14

திண்டுக்கல் - 40

ஈரோடு -49

கள்ளக்குறிச்சி - 11

காஞ்சிபுரம் - 371

கன்னியாகுமரி - 117

கரூர் - 40

கிருஷ்ணகிரி - 6

மதுரை - 169

நாகை - 72

நாமக்கல் - 32

நீலகிரி - 23

பெரம்பலூர் -19

புதுக்கோட்டை - 147

ராமநாதபுரம் - 61

ராணிப்பேட்டை - 254

சேலம் - 217

சிவகங்கை - 92

தென்காசி - 99

தஞ்சை - 59

தேனி - 171

திருப்பத்தூர் - 72

திருவள்ளூர் - 407

திருவண்ணாமலை - 123

திருவாரூர் - 7

தூத்துக்குடி - 157

திருநெல்வேலி - 137

திருப்பூர் - 80

 திருச்சி - 135

வேலூர் - 45

விழுப்புரம் - 98

விருதுநகர் - 292

மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 1,497

செங்கல்பட்டு - 19,175

சென்னை - 1,12,059

கோவை - 7,592

கடலூர் - 5,685

தர்மபுரி - 913

திண்டுக்கல் - 4,246

ஈரோடு - 1,164

கள்ளக்குறிச்சி - 4,650

காஞ்சிபுரம் - 12,582

கன்னியாகுமரி - 6,863

கரூர் - 888

கிருஷ்ணகிரி - 1,530

மதுரை - 12,366

நாகை - 1,321

நாமக்கல் - 1,064

நீலகிரி - 990

பெரம்பலூர் - 808

புதுக்கோட்டை - 3,534

ராமநாதபுரம் - 3,780

ராணிப்பேட்டை - 7,729

சேலம் - 5,170

சிவகங்கை - 3,139

தென்காசி - 3,481

தஞ்சை - 4,406

தேனி - 8,836

திருப்பத்தூர் - 1,799

திருவள்ளூர் - 18,096

திருவண்ணாமலை - 8,279

திருவாரூர் - 2,119

தூத்துக்குடி - 9,626

திருநெல்வேலி - 6,938

திருப்பூர் - 1,315

 திருச்சி - 5,386

வேலூர் - 7,770

விழுப்புரம் - 4,811

விருதுநகர் - 10,629

.