ஹைலைட்ஸ்
- ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,67,015 ஆக அதிகரித்துள்ளது
- இன்று 117 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்
- தற்போது 53,716 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 3.26 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 70,153 மாதிரிகளில் 5,890 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 16வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 3,26,245 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 5,556 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,67,015 ஆக அதிகரித்துள்ளது. இன்று 117 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த 10வது நாளாக இன்றும் 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 5,514 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,716 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையை பொறுத்த அளவில் இன்று 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,890 நபர்களில் 1,187 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,14,260 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,408 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்
அரியலூர் - 69
செங்கல்பட்டு - 437
சென்னை -1,187
கோவை - 385
கடலூர் - 221
தர்மபுரி - 39
திண்டுக்கல் - 138
ஈரோடு -128
கள்ளக்குறிச்சி - 30
காஞ்சிபுரம் - 315
கன்னியாகுமரி - 128
கரூர் - 14
கிருஷ்ணகிரி - 12
மதுரை - 46
நாகை - 34
நாமக்கல் - 30
நீலகிரி -18
பெரம்பலூர் -24
புதுக்கோட்டை - 155
ராமநாதபுரம் - 57
ராணிப்பேட்டை - 178
சேலம் - 191
சிவகங்கை - 70
தென்காசி - 93
தஞ்சை - 88
தேனி - 367
திருப்பத்தூர் - 63
திருவள்ளூர் - 495
திருவண்ணாமலை - 81
திருவாரூர் - 56
தூத்துக்குடி - 60
திருநெல்வேலி - 117
திருப்பூர் - 53
திருச்சி - 106
வேலூர் - 178
விழுப்புரம் - 127
விருதுநகர் - 90
மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:
அரியலூர் - 1,642
செங்கல்பட்டு - 20,080
சென்னை - 1,14,260
கோவை - 8,274
கடலூர் - 6,165
தர்மபுரி - 969
திண்டுக்கல் - 4,524
ஈரோடு - 1,334
கள்ளக்குறிச்சி - 4,776
காஞ்சிபுரம் - 13,409
கன்னியாகுமரி - 7,178
கரூர் - 939
கிருஷ்ணகிரி - 1,552
மதுரை - 12,561
நாகை - 1,422
நாமக்கல் - 1,144
நீலகிரி - 1,010
பெரம்பலூர் - 863
புதுக்கோட்டை - 3,818
ராமநாதபுரம் - 3,898
ராணிப்பேட்டை - 7,963
சேலம் - 5,537
சிவகங்கை - 3,271
தென்காசி - 3,725
தஞ்சை - 4,652
தேனி - 9,489
திருப்பத்தூர் - 1,932
திருவள்ளூர் - 18,958
திருவண்ணாமலை - 8,514
திருவாரூர் - 2,202
தூத்துக்குடி - 9,790
திருநெல்வேலி - 7,229
திருப்பூர் - 1,431
திருச்சி - 5,654
வேலூர் - 8,078
விழுப்புரம் - 5,033
விருதுநகர் - 10,838