ஹைலைட்ஸ்
- ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,72,251 ஆக அதிகரித்துள்ளது
- இன்று 127 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்
- ஒட்டு மொத்த உயிரிழப்பு 5,641 ஆக அதிகரித்துள்ளது
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 3.32 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 71,343 மாதிரிகளில் 5,860 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 17வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 3,32,105 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 5,236 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,72,251 ஆக அதிகரித்துள்ளது. இன்று 127 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த 11வது நாளாக இன்றும் 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 5,641 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 54,213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையை பொறுத்த அளவில் இன்று 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,860 நபர்களில் 1,179 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,15,444 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,434 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்
அரியலூர் - 73
செங்கல்பட்டு - 376
சென்னை -1,179
கோவை - 290
கடலூர் - 340
தர்மபுரி - 18
திண்டுக்கல் - 118
ஈரோடு -14
கள்ளக்குறிச்சி - 81
காஞ்சிபுரம் - 184
கன்னியாகுமரி - 182
கரூர் - 40
கிருஷ்ணகிரி - 56
மதுரை - 90
நாகை - 81
நாமக்கல் - 34
நீலகிரி -32
பெரம்பலூர் -26
புதுக்கோட்டை - 170
ராமநாதபுரம் - 59
ராணிப்பேட்டை - 260
சேலம் - 200
சிவகங்கை - 49
தென்காசி - 87
தஞ்சை - 109
தேனி - 213
திருப்பத்தூர் - 70
திருவள்ளூர் - 422
திருவண்ணாமலை - 100
திருவாரூர் - 54
தூத்துக்குடி - 77
திருநெல்வேலி - 169
திருப்பூர் - 68
திருச்சி - 117
வேலூர் - 153
விழுப்புரம் - 84
விருதுநகர் - 167
மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:
அரியலூர் - 1,715
செங்கல்பட்டு - 20,465
சென்னை - 1,15,444
கோவை - 8,569
கடலூர் - 6,505
தர்மபுரி - 987
திண்டுக்கல் - 4,645
ஈரோடு - 1,349
கள்ளக்குறிச்சி - 4,857
காஞ்சிபுரம் - 13,576
கன்னியாகுமரி - 7,359
கரூர் - 982
கிருஷ்ணகிரி - 1,611
மதுரை - 12,643
நாகை - 1,504
நாமக்கல் - 1,181
நீலகிரி - 1,033
பெரம்பலூர் - 889
புதுக்கோட்டை - 3,880
ராமநாதபுரம் - 3,957
ராணிப்பேட்டை - 8,217
சேலம் - 5,737
சிவகங்கை - 3,320
தென்காசி - 3,814
தஞ்சை - 4,764
தேனி - 9,703
திருப்பத்தூர் - 1,998
திருவள்ளூர் - 19,382
திருவண்ணாமலை - 8,622
திருவாரூர் - 2,254
தூத்துக்குடி - 9,869
திருநெல்வேலி - 7,398
திருப்பூர் - 1,495
திருச்சி - 5,762
வேலூர் - 8,236
விழுப்புரம் - 5,117
விருதுநகர் - 11,107