ஹைலைட்ஸ்
- ஒட்டு மொத்த உயிரிழப்பு 5,886 ஆக அதிகரித்துள்ளது
- தற்போது 54,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- இன்று 120 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.43 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 67,532 மாதிரிகளில் 5,890 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 19வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 3,43,945 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 5,667 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,83,937 ஆக அதிகரித்துள்ளது. இன்று 120 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த 15வது நாளாக இன்றும் 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 5,886 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 54,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,890 நபர்களில் 1,185 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,17,839 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,478 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்
அரியலூர் - 76
செங்கல்பட்டு - 224
சென்னை -1,185
கோவை - 393
கடலூர் - 390
தர்மபுரி - 28
திண்டுக்கல் - 154
ஈரோடு -137
கள்ளக்குறிச்சி - 54
காஞ்சிபுரம் - 174
கன்னியாகுமரி - 209
கரூர் - 37
கிருஷ்ணகிரி - 14
மதுரை - 136
நாகை - 10
நாமக்கல் - 65
நீலகிரி -27
பெரம்பலூர் -34
புதுக்கோட்டை - 164
ராமநாதபுரம் - 47
ராணிப்பேட்டை - 151
சேலம் - 268
சிவகங்கை - 54
தென்காசி - 147
தஞ்சை - 113
தேனி - 279
திருப்பத்தூர் - 72
திருவள்ளூர் - 308
திருவண்ணாமலை - 77
திருவாரூர் - 72
தூத்துக்குடி - 75
திருநெல்வேலி - 100
திருப்பூர் - 70
திருச்சி - 121
வேலூர் - 63
விழுப்புரம் - 138
விருதுநகர் - 212
மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:
அரியலூர் - 1,868
செங்கல்பட்டு - 21,151
சென்னை - 1,17,839
கோவை - 9,362
கடலூர் - 7,081
தர்மபுரி - 1,035
திண்டுக்கல் - 4,910
ஈரோடு - 1,582
கள்ளக்குறிச்சி - 4,972
காஞ்சிபுரம் - 14,035
கன்னியாகுமரி - 7,699
கரூர் - 1,048
கிருஷ்ணகிரி - 1,672
மதுரை - 12,888
நாகை - 1,580
நாமக்கல் - 1,287
நீலகிரி - 1,083
பெரம்பலூர் - 975
புதுக்கோட்டை - 4,342
ராமநாதபுரம் - 4,064
ராணிப்பேட்டை - 8,512
சேலம் - 6,185
சிவகங்கை - 3,423
தென்காசி - 4,052
தஞ்சை - 5,000
தேனி - 10,189
திருப்பத்தூர் - 2,085
திருவள்ளூர் - 20,179
திருவண்ணாமலை - 8,797
திருவாரூர் - 2,390
தூத்துக்குடி - 10,040
திருநெல்வேலி - 7,625
திருப்பூர் - 1,601
திருச்சி - 5,990
வேலூர் - 8,554
விழுப்புரம் - 5,387
விருதுநகர் - 11,400