This Article is From Aug 28, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

இன்று மட்டும் 5,752 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,49,682 ஆக அதிகரித்துள்ளது. இன்று 102 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4.09 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 75,103 மாதிரிகளில் 5,996 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 30வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 4,09,238 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 5,752 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,49,682 ஆக அதிகரித்துள்ளது. இன்று 102 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த சில நாட்களாக 100க்கும் குறைவான உயிரிழப்பு பதிவாகியுள்ள நிலையில் தற்போது உயிரிழப்பு 100க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 7,050 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,506 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,996 நபர்களில் 1,296 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,31,869 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,690 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் 

அரியலூர் - 67

செங்கல்பட்டு - 296

சென்னை -1,296

கோவை - 496

கடலூர் - 256

தர்மபுரி - 16

திண்டுக்கல் - 96

ஈரோடு -126

கள்ளக்குறிச்சி - 77

காஞ்சிபுரம் - 194

கன்னியாகுமரி - 81

கரூர் - 35

கிருஷ்ணகிரி - 29

மதுரை - 103

நாகை - 56

நாமக்கல் - 89

நீலகிரி -38

பெரம்பலூர் -9

புதுக்கோட்டை - 97

ராமநாதபுரம் - 29

ராணிப்பேட்டை - 137

சேலம் - 437

சிவகங்கை - 55

தென்காசி - 61

தஞ்சை - 132

தேனி - 114

திருப்பத்தூர் - 48

திருவள்ளூர் - 298

திருவண்ணாமலை - 205

திருவாரூர் - 120

தூத்துக்குடி - 103

திருநெல்வேலி - 128

திருப்பூர் - 120

 திருச்சி - 85

வேலூர் - 157

விழுப்புரம் - 152

விருதுநகர் - 152

மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 2,519

செங்கல்பட்டு - 25,058

சென்னை - 1,31,869

கோவை - 13,897

கடலூர் - 10,334

தர்மபுரி - 1,200

திண்டுக்கல் - 6,218

ஈரோடு - 2,735

கள்ளக்குறிச்சி - 5,708

காஞ்சிபுரம் - 16,703

கன்னியாகுமரி - 9,175

கரூர் - 1,454

கிருஷ்ணகிரி - 2,006

மதுரை - 13,788

நாகை - 2,339

நாமக்கல் - 1,917

நீலகிரி - 1,536

பெரம்பலூர் - 1,249

புதுக்கோட்டை - 5,751

ராமநாதபுரம் - 4,628

ராணிப்பேட்டை - 10,069

சேலம் - 9,815

சிவகங்கை - 3,962

தென்காசி - 5,157

தஞ்சை - 6,238

தேனி - 12,293

திருப்பத்தூர் - 2,759

திருவள்ளூர் - 23,926

திருவண்ணாமலை - 9,988

திருவாரூர் - 3,276

தூத்துக்குடி - 11,112

திருநெல்வேலி - 9,148

திருப்பூர் - 2,458

 திருச்சி - 7,158

வேலூர் - 10,320

விழுப்புரம் - 6,896

விருதுநகர் - 12,433

.