This Article is From Aug 29, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

இன்று மட்டும் 6,045 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,55,727 ஆக அதிகரித்துள்ளது. இன்று 87 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4.15 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 80,988 மாதிரிகளில் 6,352 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 30 நாட்களாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியிருந்த நிலையில் தற்போது மீண்டும் 6 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் ஒட்டு மொத்த பாதிப்பு 4,15,988 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 6,045 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,55,727 ஆக அதிகரித்துள்ளது. இன்று 87 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமான உயிரிழப்பு பதிவாகியிருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 100க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 7,137 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,726 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,352 நபர்களில் 1,285 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,33,173 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,712 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் 

அரியலூர் - 60

செங்கல்பட்டு - 306

சென்னை -1,285

கோவை - 491

கடலூர் - 420

தர்மபுரி - 18

திண்டுக்கல் - 129

ஈரோடு -156

கள்ளக்குறிச்சி - 82

காஞ்சிபுரம் - 241

கன்னியாகுமரி - 161

கரூர் - 30

கிருஷ்ணகிரி - 40

மதுரை - 115

நாகை - 101

நாமக்கல் - 70

நீலகிரி -17

பெரம்பலூர் -19

புதுக்கோட்டை - 124

ராமநாதபுரம் - 35

ராணிப்பேட்டை - 151

சேலம் - 432

சிவகங்கை - 35

தென்காசி - 75

தஞ்சை - 134

தேனி - 125

திருப்பத்தூர் - 30

திருவள்ளூர் - 284

திருவண்ணாமலை - 152

திருவாரூர் - 102

தூத்துக்குடி - 89

திருநெல்வேலி - 154

திருப்பூர் - 100

 திருச்சி - 102

வேலூர் - 178

விழுப்புரம் - 171

விருதுநகர் - 126

மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 2,579

செங்கல்பட்டு - 25,366

சென்னை - 1,33,173

கோவை - 14,393

கடலூர் - 10,755

தர்மபுரி - 1,210

திண்டுக்கல் - 6,345

ஈரோடு - 2,891

கள்ளக்குறிச்சி - 5,790

காஞ்சிபுரம் - 16,950

கன்னியாகுமரி - 9,336

கரூர் - 1,484

கிருஷ்ணகிரி - 2,046

மதுரை - 13,894

நாகை - 2,440

நாமக்கல் - 1,986

நீலகிரி - 1,551

பெரம்பலூர் - 1,268

புதுக்கோட்டை - 5,875

ராமநாதபுரம் - 4,665

ராணிப்பேட்டை - 10,189

சேலம் - 10,248

சிவகங்கை - 3,995

தென்காசி - 5,233

தஞ்சை - 6,373

தேனி - 12,420

திருப்பத்தூர் - 2,790

திருவள்ளூர் - 24,191

திருவண்ணாமலை - 10,147

திருவாரூர் - 3,386

தூத்துக்குடி - 11,201

திருநெல்வேலி - 9,301

திருப்பூர் - 2,557

 திருச்சி - 7,261

வேலூர் - 10,507

விழுப்புரம் - 7,069

விருதுநகர் - 12,559

.