தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4.22 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 83,250 மாதிரிகளில் 6,495 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 31 நாட்களாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியிருந்த நிலையில் தற்போது மீண்டும் 6 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் ஒட்டு மொத்த பாதிப்பு 4,22,085 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 6,406 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,62,133 ஆக அதிகரித்துள்ளது. இன்று 94 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமான உயிரிழப்பு பதிவாகியிருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 100க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 7,231 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,721 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,495 நபர்களில் 1,249 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,34,436 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,729 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்
அரியலூர் - 89
செங்கல்பட்டு - 419
சென்னை -1,249
கோவை - 498
கடலூர் - 383
தர்மபுரி - 14
திண்டுக்கல் - 88
ஈரோடு -158
கள்ளக்குறிச்சி - 228
காஞ்சிபுரம் - 193
கன்னியாகுமரி - 122
கரூர் - 49
கிருஷ்ணகிரி - 69
மதுரை - 134
நாகை - 135
நாமக்கல் - 70
நீலகிரி -36
பெரம்பலூர் -23
புதுக்கோட்டை - 108
ராமநாதபுரம் - 23
ராணிப்பேட்டை - 196
சேலம் - 329
சிவகங்கை - 33
தென்காசி - 84
தஞ்சை - 117
தேனி - 176
திருப்பத்தூர் - 34
திருவள்ளூர் - 293
திருவண்ணாமலை - 168
திருவாரூர் - 95
தூத்துக்குடி - 91
திருநெல்வேலி - 139
திருப்பூர் - 93
திருச்சி - 138
வேலூர் - 167
விழுப்புரம் - 183
விருதுநகர் - 63
மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:
அரியலூர் - 2,670
செங்கல்பட்டு - 25,763
சென்னை - 1,34,436
கோவை - 14,894
கடலூர் - 11,140
தர்மபுரி - 1,232
திண்டுக்கல் - 6,434
ஈரோடு - 3,049
கள்ளக்குறிச்சி - 6,017
காஞ்சிபுரம் - 17,155
கன்னியாகுமரி - 9,460
கரூர் - 1,537
கிருஷ்ணகிரி - 2,115
மதுரை - 14,030
நாகை - 2,577
நாமக்கல் - 2,051
நீலகிரி - 1,584
பெரம்பலூர் - 1,292
புதுக்கோட்டை - 5,985
ராமநாதபுரம் - 4,687
ராணிப்பேட்டை - 10,385
சேலம் - 10,583
சிவகங்கை - 4,028
தென்காசி - 5,318
தஞ்சை - 6,494
தேனி - 12,599
திருப்பத்தூர் - 2,824
திருவள்ளூர் - 24,475
திருவண்ணாமலை - 10,316
திருவாரூர் - 3,481
தூத்துக்குடி - 11,296
திருநெல்வேலி - 9,437
திருப்பூர் - 2,649
திருச்சி - 7,380
வேலூர் - 10,671
விழுப்புரம் - 7,253
விருதுநகர் - 12,622