தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4.28 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 75,100 மாதிரிகளில் 5,956 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒட்டு மொத்த பாதிப்பு 4,28,041 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 6,008 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,68,141 ஆக அதிகரித்துள்ளது. இன்று 91 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமான உயிரிழப்பு பதிவாகியிருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 100க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 7,322 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,578 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,956 நபர்களில் 1,150 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,35,597 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,747 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்
அரியலூர் - 75
செங்கல்பட்டு - 347
சென்னை -1,150
கோவை - 589
கடலூர் - 307
தர்மபுரி - 16
திண்டுக்கல் - 129
ஈரோடு -127
கள்ளக்குறிச்சி - 66
காஞ்சிபுரம் - 187
கன்னியாகுமரி - 98
கரூர் - 47
கிருஷ்ணகிரி - 11
மதுரை - 127
நாகை - 105
நாமக்கல் - 92
நீலகிரி -30
பெரம்பலூர் -10
புதுக்கோட்டை - 86
ராமநாதபுரம் - 29
ராணிப்பேட்டை - 124
சேலம் - 497
சிவகங்கை - 26
தென்காசி - 94
தஞ்சை - 125
தேனி - 77
திருப்பத்தூர் - 47
திருவள்ளூர் - 299
திருவண்ணாமலை - 140
திருவாரூர் - 113
தூத்துக்குடி - 111
திருநெல்வேலி - 106
திருப்பூர் - 70
திருச்சி - 95
வேலூர் - 125
விழுப்புரம் - 176
விருதுநகர் - 90
மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:
அரியலூர் - 2,746
செங்கல்பட்டு - 26,109
சென்னை - 1,35,597
கோவை - 15,490
கடலூர் - 11,449
தர்மபுரி - 1,249
திண்டுக்கல் - 6,558
ஈரோடு - 3,177
கள்ளக்குறிச்சி - 6,083
காஞ்சிபுரம் - 17,351
கன்னியாகுமரி - 9,558
கரூர் - 1,585
கிருஷ்ணகிரி - 2,128
மதுரை - 14,152
நாகை - 2,687
நாமக்கல் - 2,144
நீலகிரி - 1,614
பெரம்பலூர் - 1,303
புதுக்கோட்டை - 6,071
ராமநாதபுரம் - 4,718
ராணிப்பேட்டை - 10,513
சேலம் - 11,074
சிவகங்கை - 4,053
தென்காசி - 5,416
தஞ்சை - 6,610
தேனி - 12,676
திருப்பத்தூர் - 2,872
திருவள்ளூர் - 24,767
திருவண்ணாமலை - 10,457
திருவாரூர் - 3,586
தூத்துக்குடி - 11,409
திருநெல்வேலி - 9,537
திருப்பூர் - 2,719
திருச்சி - 7,478
வேலூர் - 10,785
விழுப்புரம் - 7,429
விருதுநகர் - 12,712