This Article is From Jul 22, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஜூலை 22 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

மருத்துவர் வடிவேல் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் விடுபட்ட கொரோனா உயிரிழப்பு குறித்த அறிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளனர். இதில் மார்ச் 1 முதல் ஜூன் 10 வரை விடுபட்ட மரணங்கள் எண்ணிக்கை 444 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,144 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 51,765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஜூலை 22 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

ஹைலைட்ஸ்

  • மார்ச் 1 முதல் ஜூன் 10 வரை விடுபட்ட மரணங்கள் எண்ணிக்கை 444
  • ஒட்டு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,144 ஆக அதிகரித்துள்ளது
  • தற்போது 51,765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 1.86 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 58,475 நபர்களில் 5,849 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவாகும். இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 1,86,492 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 4,910 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று 74 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 2,700 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவர் வடிவேல் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் விடுபட்ட கொரோனா உயிரிழப்பு குறித்த அறிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளனர். இதில் மார்ச் 1 முதல் ஜூன் 10 வரை விடுபட்ட மரணங்கள் எண்ணிக்கை 444 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,144 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 51,765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் 19வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,849 பேரில் 1,171 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 89,561 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 1,939 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக ஜூலை 22 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் 

அரியலூர் - 26

செங்கல்பட்டு - 223

சென்னை -1,171

கோவை - 178

கடலூர் - 71

தர்மபுரி - 7

திண்டுக்கல் - 99

ஈரோடு -6

கள்ளக்குறிச்சி - 86

காஞ்சிபுரம் - 325

கன்னியாகுமரி - 152

கரூர் - 4

கிருஷ்ணகிரி - 69

மதுரை - 197

நாகை - 14

நாமக்கல் - 41

நீலகிரி - 12

பெரம்பலூர் - 15

புதுக்கோட்டை - 59

ராமநாதபுரம் - 88

ராணிப்பேட்டை - 414

சேலம் - 99

சிவகங்கை - 70

தென்காசி - 85

தஞ்சை - 106

தேனி - 165

திருப்பத்தூர் - 60

திருவள்ளூர் - 430

திருவண்ணாமலை - 210

திருவாரூர் - 45

தூத்துக்குடி - 327

திருநெல்வேலி - 120

திருப்பூர் - 29

 திருச்சி - 213

வேலூர் - 137

விழுப்புரம் - 105

விருதுநகர் - 363

மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 710

செங்கல்பட்டு - 10,495

சென்னை - 89,561

கோவை - 2,539

கடலூர் - 1,991

தர்மபுரி - 486

திண்டுக்கல் - 1,826

ஈரோடு - 518

கள்ளக்குறிச்சி - 2,517

காஞ்சிபுரம் - 5,697

கன்னியாகுமரி - 2,721

கரூர் - 296

கிருஷ்ணகிரி - 520

மதுரை - 8,705

நாகை - 480

நாமக்கல் - 395

நீலகிரி - 528

பெரம்பலூர் - 248

புதுக்கோட்டை - 1,186

ராமநாதபுரம் - 2,692

ராணிப்பேட்டை - 2,784

சேலம் - 2,560

சிவகங்கை - 1,760

தென்காசி - 1,344

தஞ்சை - 1,422

தேனி - 2,899

திருப்பத்தூர் - 659

திருவள்ளூர் - 10,210

திருவண்ணாமலை - 4,444

திருவாரூர் - 1,059

தூத்துக்குடி - 4,241

திருநெல்வேலி - 2,972

திருப்பூர் - 567

 திருச்சி - 2,686

வேலூர் - 4,359

விழுப்புரம் - 2,501

விருதுநகர் - 4,287

.