தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 1.99 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 63,182 நபர்களில் 6,785 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவாகும். இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 1,99,749 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 6,504 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 1,43,297 ஆக அதிகரித்துள்ளது. இன்று 88 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 3,320 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையை பொறுத்த அளவில் 21வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,785 பேரில் 1,299 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 92,206 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 1,969 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக ஜூலை 24 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:
இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்
அரியலூர் - 37
செங்கல்பட்டு - 419
சென்னை -1,299
கோவை - 189
கடலூர் - 91
தர்மபுரி - 36
திண்டுக்கல் - 80
ஈரோடு -25
கள்ளக்குறிச்சி - 179
காஞ்சிபுரம் - 349
கன்னியாகுமரி - 266
கரூர் - 5
கிருஷ்ணகிரி - 82
மதுரை - 326
நாகை - 46
நாமக்கல் - 28
நீலகிரி - 34
பெரம்பலூர் - 16
புதுக்கோட்டை - 95
ராமநாதபுரம் - 72
ராணிப்பேட்டை - 222
சேலம் - 122
சிவகங்கை - 82
தென்காசி - 93
தஞ்சை - 186
தேனி - 234
திருப்பத்தூர் - 56
திருவள்ளூர் - 378
திருவண்ணாமலை - 134
திருவாரூர் - 96
தூத்துக்குடி - 313
திருநெல்வேலி - 171
திருப்பூர் - 18
திருச்சி - 217
வேலூர் - 174
விழுப்புரம் - 164
விருதுநகர் - 424
மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:
அரியலூர் - 796
செங்கல்பட்டு - 11,308
சென்னை - 92,206
கோவை - 2,966
கடலூர் - 2,162
தர்மபுரி - 541
திண்டுக்கல் - 2,012
ஈரோடு - 564
கள்ளக்குறிச்சி - 2,833
காஞ்சிபுரம் - 6,361
கன்னியாகுமரி - 3,124
கரூர் - 328
கிருஷ்ணகிரி - 633
மதுரை - 9,302
நாகை - 523
நாமக்கல் - 459
நீலகிரி - 621
பெரம்பலூர் - 271
புதுக்கோட்டை - 1,394
ராமநாதபுரம் - 2,865
ராணிப்பேட்டை - 3,223
சேலம் - 2,732
சிவகங்கை - 1,906
தென்காசி - 1,506
தஞ்சை - 1,730
தேனி - 3,321
திருப்பத்தூர் - 778
திருவள்ளூர் - 11,008
திருவண்ணாமலை - 4,781
திருவாரூர் - 1,156
தூத்துக்குடி - 4,971
திருநெல்வேலி - 3,387
திருப்பூர் - 617
திருச்சி - 3,089
வேலூர் - 4,646
விழுப்புரம் - 2,766
விருதுநகர் - 5,193