ஹைலைட்ஸ்
- ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 1,51,055 ஆக அதிகரித்துள்ளது
- இன்று 89 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்
- தற்போது 52,273 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 2 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 61,729 நபர்களில் 6,988 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவாகும். இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 2,06,737 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 7,758 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 1,51,055 ஆக அதிகரித்துள்ளது. இன்று 89 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 3,409 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,273 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையை பொறுத்த அளவில் 22வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 6,988 பேரில் 1,329 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 93,537 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 1,989 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக ஜூலை 25 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:
இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்
அரியலூர் - 4
செங்கல்பட்டு - 419
சென்னை -1,329
கோவை - 270
கடலூர் - 89
தர்மபுரி - 30
திண்டுக்கல் - 100
ஈரோடு -22
கள்ளக்குறிச்சி - 104
காஞ்சிபுரம் - 442
கன்னியாகுமரி - 269
கரூர் - 27
கிருஷ்ணகிரி - 31
மதுரை - 301
நாகை - 10
நாமக்கல் - 51
நீலகிரி - 40
பெரம்பலூர் - 25
புதுக்கோட்டை - 110
ராமநாதபுரம் - 86
ராணிப்பேட்டை - 244
சேலம் - 112
சிவகங்கை - 84
தென்காசி - 99
தஞ்சை - 162
தேனி - 235
திருப்பத்தூர் - 86
திருவள்ளூர் - 385
திருவண்ணாமலை - 152
திருவாரூர் - 100
தூத்துக்குடி - 317
திருநெல்வேலி - 212
திருப்பூர் - 51
திருச்சி - 199
வேலூர் - 212
விழுப்புரம் - 157
விருதுநகர் - 376
மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:
அரியலூர் - 800
செங்கல்பட்டு - 11,764
சென்னை - 93,537
கோவை - 3,237
கடலூர் - 2,250
தர்மபுரி - 570
திண்டுக்கல் - 2,115
ஈரோடு - 586
கள்ளக்குறிச்சி - 2,938
காஞ்சிபுரம் - 6,796
கன்னியாகுமரி - 3,393
கரூர் - 352
கிருஷ்ணகிரி - 664
மதுரை - 9,595
நாகை - 533
நாமக்கல் - 510
நீலகிரி - 661
பெரம்பலூர் - 296
புதுக்கோட்டை - 1,504
ராமநாதபுரம் - 2,951
ராணிப்பேட்டை - 3,467
சேலம் - 2,845
சிவகங்கை - 1,991
தென்காசி - 1,607
தஞ்சை - 1,892
தேனி - 3,556
திருப்பத்தூர் - 864
திருவள்ளூர் - 11,395
திருவண்ணாமலை - 4,933
திருவாரூர் - 1,256
தூத்துக்குடி - 5,291
திருநெல்வேலி - 3,595
திருப்பூர் - 668
திருச்சி - 3,289
வேலூர் - 4,854
விழுப்புரம் - 2,923
விருதுநகர் - 5,573