தமிழகத்தில் ஒரே நாளில் 5,892 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் 4 லட்சத்து 45 ஆயிரத்து 851 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை எண்ணிக்கையானது 4.45 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று 80864 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,892 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் ஒட்டு மொத்த பாதிப்பு 4,45,851 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 6,110 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,86,173 ஆக அதிகரித்துள்ளது. இன்று 92 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமான உயிரிழப்பு பதிவாகியிருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 100க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 7,608 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 968 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,38,724 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,788 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலேயே பரிசோதனைகளின் எண்ணிக்கை முதன்முறையாக தமிழகத்தில் 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:
அரியலூர் - 47
செங்கல்பட்டு - 378
சென்னை -968
கோவை - 593
கடலூர் - 590
தர்மபுரி - 21
திண்டுக்கல் - 133
ஈரோடு -111
கள்ளக்குறிச்சி - 121
காஞ்சிபுரம் - 150
கன்னியாகுமரி - 92
கரூர் - 31
கிருஷ்ணகிரி - 84
மதுரை - 86
நாகை - 58
நாமக்கல் - 58
நீலகிரி -61
பெரம்பலூர் -21
புதுக்கோட்டை - 103
ராமநாதபுரம் - 72
ராணிப்பேட்டை - 157
சேலம் - 208
சிவகங்கை - 29
தென்காசி - 61
தஞ்சை - 136
தேனி - 80
திருப்பத்தூர் - 66
திருவள்ளூர் - 258
திருவண்ணாமலை - 140
திருவாரூர் - 89
தூத்துக்குடி - 53
திருநெல்வேலி - 163
திருப்பூர் - 112
திருச்சி - 114
வேலூர் - 136
விழுப்புரம் - 150
விருதுநகர் - 125
மாவட்ட வாரியாக கேஸ்கள் விவரம்:
அரியலூர் - 2,909
செங்கல்பட்டு - 27,286
சென்னை - 1,38724
கோவை - 17,258
கடலூர் - 12,737
தர்மபுரி - 1,330
திண்டுக்கல் - 6,939
ஈரோடு - 3,475
கள்ளக்குறிச்சி - 6,464
காஞ்சிபுரம் - 17,818
கன்னியாகுமரி - 9,913
கரூர் - 1,714
கிருஷ்ணகிரி - 2,322
மதுரை - 14,455
நாகை - 2,912
நாமக்கல் - 2,355
நீலகிரி - 1,720
பெரம்பலூர் - 1,368
புதுக்கோட்டை - 6,350
ராமநாதபுரம் - 4,889
ராணிப்பேட்டை - 10,949
சேலம் - 12,043
சிவகங்கை - 4,145
தென்காசி - 5,606
தஞ்சை - 7,026
தேனி - 12,910
திருப்பத்தூர் - 3,067
திருவள்ளூர் - 25,563
திருவண்ணாமலை - 10,974
திருவாரூர் - 3,898
தூத்துக்குடி - 11,587
திருநெல்வேலி - 9,959
திருப்பூர் - 3018
திருச்சி - 7,799
வேலூர் - 11,217
விழுப்புரம் - 7,971
விருதுநகர் - 12,970