தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 80,503 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,783 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,69,256 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 89 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,925 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் 4,10,116 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
சென்னையைப் பொறுத்தவரையில் இன்று 955 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,42,603 ஆக அதிகரித்துள்ளது. 16 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 11,145 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரையில் 52,98,508 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன்முறையாக 50 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் 5,930 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தம் 51,215 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று (செப்.7) புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:
அரியலூர் - 29
செங்கல்பட்டு - 330
சென்னை -949
கோவை - 524
கடலூர் - 398
தர்மபுரி - 56
திண்டுக்கல் - 136
ஈரோடு -117
கள்ளக்குறிச்சி - 189
காஞ்சிபுரம் - 190
கன்னியாகுமரி - 96
கரூர் - 54
கிருஷ்ணகிரி - 71
மதுரை - 106
நாகை - 64
நாமக்கல் - 97
நீலகிரி - 36
பெரம்பலூர் -13
புதுக்கோட்டை - 89
ராமநாதபுரம் - 33
ராணிப்பேட்டை - 126
சேலம் - 185
சிவகங்கை - 41
தென்காசி - 65
தஞ்சை - 122
தேனி - 88
திருப்பத்தூர் - 57
திருவள்ளூர் -248
திருவண்ணாமலை - 262
திருவாரூர் - 142
தூத்துக்குடி - 91
திருநெல்வேலி - 81
திருப்பூர் - 194
திருச்சி - 112
வேலூர் - 147
விழுப்புரம் - 139
விருதுநகர் - 97